விரைவில் நீட் தேர்வுக்கு முடிவு கட்டுவோம்.. கனிமொழி அதிரடி சரவெடி..

By Ezhilarasan BabuFirst Published Sep 13, 2021, 1:44 PM IST
Highlights

திமுக எப்போதும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவே குரல்கொடுக்கும் என தெரிவித்த அவர், அதிமுகவைப் பொறுத்தவரையில் நீட்தேர்வு விவகாரத்தில் வெறும் கண்துடைப்புக்காக செயல்பட்டது, ஆனால் திமுக சமூக நீதிக்காக செயல்படுகிறது,

விரைவில் நீட் தேர்வுக்கு சரியான முடிவு எட்டப்படும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். அதேபோல் நீதிமன்றங்கள் மறுத்த விஷயங்கள் மற்றும் ஒன்றிய அரசு மறுத்த பல விஷயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை அண்ணா நகர் வடக்கு சத்யா நகர் பகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, பல திறமையான மருத்துவர்கள் தமிழகத்தில் இருந்து உருவாகியுள்ளனர். மற்றவர்களிடமிருந்து வாய்ப்பை  பரிப்பதுதான் நீட் தேர்வு, நீதிமன்றம் மருத்த விஷயங்கள் மற்றும் ஒன்றிய அரசு மருத்த பல விஷயங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் விரைவில் நீட்டுக்கும் சரியான முடிவு எட்டப்படும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம். புதிய கல்விக் கொள்கை என்பது அனைவருக்குமான கல்வி என்பதை  மறுக்கும் கல்வி கொள்கையாகும்,

திமுக எப்போதும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவே குரல்கொடுக்கும் என தெரிவித்த அவர், அதிமுகவைப் பொறுத்தவரையில் நீட்தேர்வு விவகாரத்தில் வெறும் கண்துடைப்புக்காக செயல்பட்டது, ஆனால் திமுக சமூக நீதிக்காக செயல்படுகிறது, தற்போது நீட் தேர்வின் மூலம் நடைபெறும் அநியாயமான சூழலை நீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் நாங்கள் தொடர்ந்து உணர்த்துவோம், நீட் தேர்வின் பெயரில் மாணவர்கள் உயிர் இழக்கும் விஷயம் அனைவருக்கும் வலியையும் வேதனையும் தரக்கூடியது, இதில் அரசியல் ஒருபோதும் சரியானதல்ல என அவர் கூறினார். 
 

click me!