சேது சமுத்திர திட்டத்தில் இதைதான் செய்யப்போறோம் - ஜெயலலிதா சொன்னதற்கு ’OK’ சொன்ன மத்திய அரசு...! 

First Published Mar 16, 2018, 11:07 AM IST
Highlights
We will do this in the Sethusamudram project


சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது எனவும் ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படாமல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

ராமர் பாலத்தை இடிக்காமல் சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்ககோரி பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

அதில், ராமர் பாலத்தை இடிப்பதால் மத நம்பிக்கை பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என்பதால் ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். 

இந்த வழக்கில் மத்திய அரசை பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது. அதன்படி இன்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. 

அதில், சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது எனவும் ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படாமல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 

click me!