நிச்சயம் இன்று இரவு முதல் வாகனங்களை பறிமுதல் செய்வோம்.. சென்னை மாநகர காவல் துறை எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Apr 21, 2021, 6:21 PM IST
Highlights

நகரில் சுமார் 200 இடங்களில் வாகனச் சோதனை நடந்தது. 2 ஆயிரம் காவல்துறையினர் சென்னையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். சுமார் 500 வாகனங்களில் காவல்துறையினர் சென்னை முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  

சென்னையில் நேற்று இரவு முழு ஊரடங்கின்போது வழக்குகள் எதுவும் பதிவு செய்யவில்லை என சென்னை காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் இரவு முழு ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகளில் மட்டும் மக்கள் நடமாட்டம் சிறிது காணப்பட்டது. குடியிருப்புப் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் காவல்துறையினர், சில இடங்களில் ஆளில்லாத கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்தனர். நகரில் சுமார் 200 இடங்களில் வாகனச் சோதனை நடந்தது. 2 ஆயிரம் காவல்துறையினர் சென்னையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். 

 

சுமார் 500 வாகனங்களில் காவல்துறையினர் சென்னை முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணிக்கு பிறகு தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு சாலைப் போக்குவரத்து சீராக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் இரவு முழு ஊரடங்கு காரணமாக அத்துமீறி வாகனங்களில் வந்தவர்களின் விவரங்களை சேகரித்து வைத்து காவல்துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பினர். 

ஆனால் அவர்கள் மீது எந்த வழக்கும் பதியவில்லை என்றும் சென்னை காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இன்று இரவு முழு ஊரடங்கின் போது அத்துமீறியும் விதிமுறைகளை மீறி வருபவர்களை மீண்டும் எச்சரித்து அனுப்ப காவல்துறைக்கு திட்டமில்லை எனவும், கண்டிப்பாக வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

click me!