உயிரை பணயம் வைத்து சிறுவனை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் சன்மானம்..!

Published : Apr 21, 2021, 04:44 PM IST
உயிரை பணயம் வைத்து சிறுவனை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் சன்மானம்..!

சுருக்கம்

இந்த வீடியோ காட்சியை இணையதளத்தில் பார்த்த ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இயக்குநர் அனுபம் தாரிஜா, அவருக்கு புதிய பைக்கை பரிசளிப்பதாக கூறி பாராட்டியுள்ளார். 

மும்பைக்கு அருகில் உள்ள வங்கணி ரயில் நிலையத்தில், பார்வையற்ற பெண் ஒருவர் தனது சிறுவயது மகனுடன் நிலைய நடைபாதையில் சென்று கொண்டிருந்த போது அவருடைய பிடியிலிருந்து ஓடிய சிறுவன் நடைப்பாதையில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்துவிட்டான். அங்கிருந்த பயணிகள் சிலர் விரைவு ரயில் வருவதைப் பார்த்து என்ன செய்வதென்று அறியாது திகைத்து நின்று கொண்டிருந்தபோது அங்கு தண்டவாளத்தில் பாயிண்ட்மேன் ஆக வேலை செய்துவரும் மயூர் ஷெல்கே மிக வேகமாக பாய்ந்து சென்று அந்த சிறுவனைக் காப்பாற்றி தானும் உயிர் தப்பினார். இவரை ரயில்வேதுறை அமைச்சர் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வீடியோ காட்சியை இணையதளத்தில் பார்த்த ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இயக்குநர் அனுபம் தாரிஜா, அவருக்கு புதிய பைக்கை பரிசளிப்பதாக கூறி பாராட்டியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் சார்... தில் இருந்தா எல்லாத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு எங்களோடு தேர்தலில் மோதிப்பாருங்கள்..! ஆதவ் சவால்..!
உங்களால பலபேர் இறந்திருக்கிறார்கள்... புதுவை மாநாட்டில் புஸ்ஸி ஆனந்திடம் சீறிய பெண் காவல் அதிகாரி