குதிரை ஏறி புறப்படத்தயாராகி விட்டார் அடுத்த வாரிசு... கலைஞர் குடும்பத்து குட்டி ராசாவா இது..?

By Thiraviaraj RMFirst Published Apr 21, 2021, 5:19 PM IST
Highlights

திமுக இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி. இவ்வளவு பெரிய பையனாக வளர்ந்துவிட்டாரா.? என்று வாயடைத்து போயிருக்கின்றனர் உடன்பிறப்புகள்.
 

திமுக இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி. இவ்வளவு பெரிய பையனாக வளர்ந்துவிட்டாரா.? என்று வாயடைத்து போயிருக்கின்றனர் உடன்பிறப்புகள்

.

சமீபத்தில் தேர்தல் முடிந்த பிறகு ஓய்வெடுக்க மு.க.ஸ்டாலின் குடும்பம் இரு தனி விமானங்கள் மூலம் மதுரை சென்று அங்கிருந்து கொடைக்கானல் சென்று ஓய்வெடுத்து வருகின்றனர், அங்கு மு.க.ஸ்டாலின் படு ஸ்டைலாக உடையணிந்து போஸ் கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாகியது.  இந்நிலையில் அவரது பேரன் இன்பநிதி கொடைக்கானலில் அடர்ந்து வளர்ந்த கேசத்துடன் குதிரை மேல் ஏறி நின்று கொடுக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

அவ்வப்போது மட்டும் இன்பநிதி குறித்த புகைப்படம் சமூக தளங்களில் வெளிவந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் படத்தை பார்க்கும் போது பெரிய ஆளாக வளர்ந்து இருக்கிறார். முன்னதாக அரும்பிய மீசையுடன் அப்பா உதயநிதியுடன் இணைந்து போஸ் கொடுத்திருந்திருந்தார் இன்பநிதி. இவ்ளோ பெரிய பையனா? என்று வியக்கும் அதே வேளையில், அரசியல் ரீதியாகவும் கருத்துக்களை வெளியிட்டு பலவிதமான கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள் இணையதளவாசிகள்.

திமுகவில் குடும்ப அரசியல் நடப்பதாக எதிர்க்கட்சிகள் காலங்காலமாக குற்றம் சாட்டி வருவது தெரிந்த ஒன்றே. குறிப்பாக, உதயநிதி கட்சியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருப்பதாக அந்த கட்சிக்குள்ளேயே இரு தரப்பாக முணுமுணுக்கப்பட்டு வருகிறது. சினிமா, அரசியல் என இரு குதிரையிலும் சவாரி செய்து வரும் உதயநிதி தான், திமுகவின் எதிர்காலம் என்பதே அக்கட்சியின் இளைஞர் படையின் எண்ணோட்டமாக உள்ளது. அதேசமயம், சில சீனியர் தலைகள் இதை பெரிதாக ரசிக்கவில்லை. உதயநிதியின் அதிகாரத்தை கட்சியிக்குள் இருக்கும் சீனியர்கள் யாரும் விரும்பவில்லை. அதன் தாக்கமாக ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க. செல்வம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். உதயநிதி மீதான எதிர்பார்ப்பு இப்படியிருக்க, அவருக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு இருக்கிறது யங் பாய் இன்பநிதியின் போஸ்!

இந்த போட்டோ கட்சிக்குள் இருக்கும் இளைஞர் அணியினருக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு உள்ளதாக பலரும்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.  உதயநிதி 40 வயதுக்கு மேல் கட்சிக்கு வந்தால் இன்பநிதி 20 வயதுக்குள் கட்சிக்கு வந்து விடுவார் என்கிறார்கள். ஆக அடுத்த சட்ட மன்றத்தேர்தலில் மேடைகளில் இன்பநிதி மைக் பிடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் உடன்பிறப்புகள். 

click me!