பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே! பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே! என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் மீது தாக்குதல்
நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, பார்வையாளர்களாக வந்த இருவர் மக்களவையில் குதித்து, கலர் புகையை பரவச் செய்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாதுகாப்பு எங்கே என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த சம்பவத்தில் 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும்,
இதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் மக்களவைக்குள் புகுந்த நபர்களுக்கு பாஸ் கொடுத்த பாஜக எம்பியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என கூச்சலிட்டனர்.
கேள்வி எழுப்பிய உறுப்பினர்கள்- சஸ்பெண்ட்
இதனையடுத்து அவையில் பிரச்சனை எழுப்பிய காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. சபாநாயகரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே!
பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே!
அவையில் மட்டுமல்ல..
பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது.
ஆனால் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பார்வையாளர்களை இன்றும்… pic.twitter.com/sFoQFl7kqV
பாஜகவின் மரபு
பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே! பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே! அவையில் மட்டுமல்ல.. பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது. ஆனால் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பார்வையாளர்களை இன்றும் அனுப்பிவைத்து அவைக்கு பெருமைசேர்க்கலாம். இது தான் பாஜகவின் பாராளுமன்ற மரபு என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தைத் திட்டமிட்ட லலித் ஜா டெல்லியில் சரண்!