மோடி வருகையை எதிர்க்கக்கூடாது... வரவேற்பதே நமது கடமை... உல்டாவாக மாறிய கனிமொழி..!

By Thiraviaraj RM  |  First Published Jan 2, 2022, 5:57 PM IST

கருத்தியல் விஷயங்களில் எதிர்மாறான கருத்துக்கள் இருந்தாலும், அடிப்படையில் ஒரு அரசாங்கம், ஒரு அரசாங்கத்திடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்


தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது மோடி பொங்கல் கொண்டாடப்பட இருக்கிறது. 

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதியுதவியுடன், ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைகின்றன. இந்த கல்லூரிகளை திறந்து வைக்கும் விழாவில், பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

Latest Videos

undefined

தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆனால், தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவருக்கு எதிரான கோபேக் மோடி பிரசாரம் மற்றும் டுவிட்டரில் ஹேஷ்டேக்கை திமுகவினர் ட்ரெண்ட் செய்தனர். தற்போது ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், பிரதமர் மோடியை திமுக வரவேற்பது குறித்து பல்வேறு கட்சிகளும் பலவிதமாக பேசி வருகின்றன. திமுகவை பொறுத்தவரை மோடி எங்கள் விருந்தாளி. அவரை வரவேற்பது எங்கள் கடமை என வெளிப்படையாகவே தெரிவித்து விட்டது. 

 இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், ‘’மாநில அரசின் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக வரும் பிரதமரை வரவேற்பது நமது கடமை. கருத்தியல் விஷயங்களில் எதிர்மாறான கருத்துக்கள் இருந்தாலும், அடிப்படையில் ஒரு அரசாங்கம், ஒரு அரசாங்கத்திடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், மக்களுக்கு எது நல்லது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மக்களுக்கு எதிரான திட்டங்களை திமுக அரசு ஒருபோதும் ஆதரிக்காது’’ எனத் தெரிவித்துள்ளார்.

click me!