வேட்டி காட்டி வந்தா திமுககாரன்... வேட்டியே கட்டாமல் வந்த அதிமுககாரன்... அசால்டு காட்டும் பாஜக..!

By Thiraviaraj RMFirst Published Jan 2, 2022, 5:13 PM IST
Highlights

அதிமுக, பாஜக கதை வேறு. அதிமுகவிலிருந்து பாஜகவுக்குப்போவது, கிளை அலுவலகத்திலிருந்து தலைமை அலுவலகத்துக்கான மாற்றல் போலத்தான். 

அதிமுக, பாஜக கதை வேறு. அதிமுகவிலிருந்து பாஜகவுக்குப்போவது, கிளை அலுவலகத்திலிருந்து தலைமை அலுவலகத்துக்கான மாற்றல் போலத்தான். பெரிய மாற்றமில்லை எனப்பேச்சுக்கள் எழுந்து வருகிறது.  ஆனால் பாஜக எதிர்ப்பலை அரசியலை கையில் எடுத்துள்ளது திமுக. கருப்பு பலூனை எல்லாம் மோடிக்கு எதிராக பறக்க விட்ட திமுக இப்போது ஆளும் கட்சியான பிறகு, ‘’மோடி எங்கள் விருந்தாளி’’ என்கிறது. 

மோடி எதிர்ப்பரசியலை வைத்தே ஆட்சியை பிடித்தோம் என்கின்றன திமுக கூட்டணிக் கட்சிகள். இந்த நிலையில்தான், மதுரையில் வாஜ்பாய் பிறந்தநாளுக்காக நடத்தப்பட்ட, நல்லாட்சி தின கருத்தரங்கில் பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், “தமிழ்நாட்டில் ரெண்டே ரெண்டு கட்சிதான் இருக்கு. ஒன்று, இன்றைய பாஜக, மற்றொன்று, நாளைய பாஜக.

எனவே, திமுகவினர் யாரையும் நான் திட்டுவதில்லை. நாளைக்கே நம்ம கட்சிக்கு வரப்போறவன்; பாவம் என்று விட்டுவிடுவேன். அவனுக்கு ஒரு பாஜக வேட்டியை கொடுத்துவிடுங்கப்பா என்றுதான் சொல்வேன். அதிமுககாரனை கேட்கவே வேண்டாம். அவன் வேட்டியே கட்டாமக்கூட நம் பக்கம் வந்துவிடுவான். தப்பா எடுத்துக்கக்கூடாது. அவன் பாஜக கரைவேட்டி கட்டாமக்கூட வந்துடுவான். அதைத்தான் அப்படிச் சொன்னேன்” என்று அதிமுகவினரை அநியாயத்துக்கு வாரினார். 

இதைக் கேட்டதிலிருந்து, “திமுககாரன்கூட எங்கள இந்தளவுக்கு அசிங்கப்படுத்துனதில்ல. இவங்கட்ட இப்படி கொத்தடிமை கணக்கா சிக்கிக்கிட்டோமே” என்று புழுங்குகிறார்கள் மதுரை அதிமுககாரர்கள். கூட இருந்தே குழிப்றிப்பதுதானே அரசியல் என்பதற்கு இதுவும் ஒரு சான்றே..!
 

click me!