OPS vs EPS : நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்.!ஆனால் ஒற்றை தலைமை விவகாரத்தில் மாற்றம் இல்லை-ஜெயக்குமார் அதிரடி

By Ajmal KhanFirst Published Jun 23, 2022, 9:05 AM IST
Highlights

ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் பல குழக்கங்களை ஏற்படுத்திய நிலையில், இன்று நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கும் என அதிமுக மட்டுமில்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
 

பொதுக்குழுவில் குவிந்த நிர்வாகிகள்

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் நடத்துவதுற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்சிக்கு எதிர்கட்சி தான் தொந்தரவு கொடுக்கும் ஆனால் இங்கோ கட்சிக்குள் ஏற்பட்ட மோதல் தான்  பிரச்சனையாக மாறியுள்ளது, இதன் காரணமாக அதிமுக உட்கட்சி விவகாரம் தான் தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக முக்கிய செய்தியாக உள்ளது. இந்தநிலையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டத்தை கூட்ட கூடாது என்றும் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றக்கூடாது எனவும் ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இதனை ஏற்காத இபிஎஸ் தரப்பு திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறும், தமிழக பிரச்சனைகள் உள்ளிட்ட 23 தீர்மானங்களும், வேறு சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கூறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடியது. 13 மணி நேர சட்ட போராட்டத்திற்கு பிறகு பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். ஆனால் 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த முடிவும் எடுக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகம் அடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றியென தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

ஒற்றை தலைமை முடிவில் மாற்றம் இல்லை

 இந்தநிலையில் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நீதிமன்ற கொடுத்த தீர்ப்புக்கு  கடமைப்பட்டுள்ளோம் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம், கட்சியைப் பொறுத்த வரைக்கும் எப்பொழுதும் பின்னடைவு என்று இல்லை, கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள்  எடுத்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை, ஒற்றைத் தலைமை முடிவில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லையென தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்வது தொடர்பாக கட்சியும் இணை ஒருங்கிணைப்பாளரும் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என ஜெயக்குமார் கூறினார். 

இதையும் படியுங்கள்

திரைப்பட கிளைமாக்ஸ் காட்சியை மிஞ்சிய அதிமுக பொதுக்குழு வழக்கின் நீதிமன்ற விசாரணை...! திக் திக் நிமிடங்கள்

 

click me!