நீட் விவகாரத்தில் அரசு காலம் தாழ்த்தியதால் ஒரு உயிரை இழந்தோம்: நீதிபதி வேதனை

Asianet News Tamil  
Published : Sep 22, 2017, 12:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
நீட் விவகாரத்தில் அரசு காலம் தாழ்த்தியதால் ஒரு உயிரை இழந்தோம்: நீதிபதி வேதனை

சுருக்கம்

we lost one girl because of government laziness on neet says judge

நீட் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் விவகாரத்தில் அரசு காலம் தாழ்த்தியதால் ஒரு உயிரை இழந்துள்ளோம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்தார். 

நீட் தேர்வு பயிற்சி மையங்கள் குறித்தும் தெரிவித்த நீதிபதி, தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். நீட் தேர்வு தொடர்பாக ஊடகங்களிடம் அமைச்சர் பேசக் கூடாது என்று கூறிய நீதிபதி கிருபாகரன், ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தும் வல்லுநர் குழு அமைக்க ஏன் தாமதம் ஆனது என்று கேள்வி எழுப்பினார்.

மேலும்,  வல்லுநர் குழு அமைக்க ஒரு மணி நேரம் போதாதா என்று  கேட்ட நீதிபதி கிருபாகரன்,  நீட் பயிற்சி மையங்கள், தேர்வு ஆலோசனைக் குழு தொடர்பாக வரும் 6ஆம் தேதிக்குள் அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

அரசு காலம் தாழ்த்தியதால்தான் ஒரு உயிரை இழந்துள்ளோம் என்று வேதனை தெரிவித்த அவர், மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றாதீர் என்று அரசுக்கு அறிவுறுத்தினார். 

PREV
click me!

Recommended Stories

மதுரோவை கைது செய்ய ரூ.1,11,00,00,00,000 கோடி செலவிட்ட அமெரிக்கா.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய டிரம்ப்..!
நாங்கள் இல்லாமல் திமுக ஆட்சி அமைக்க முடியுமா..? அதிகாரத்துக்கு நேரம் வந்துவிட்டது... கலங்கடிக்கும் காங்கிரஸ்..!