
சென்னை எழிலகத்தில் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுகவிலிருந்து தினகரன் விலகிக் கொள்வதாக கருத்து தெரிவித்திருப்பது.
தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாகவெ உள்ளது என்றும், அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை நன்முறையில் வழி நடத்த வேண்டும் என்பது தங்கள் நோக்கம் என்றும் குறிப்பிட்டார் .
குறிப்பாக ஒபிஎஸ் அவர்களிடமிருந்து விசுவாசத்தை கற்றுக் கொண்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை காப்பாற்றி, கட்சியை மேலும் பிளவு படாமல், அம்மா வழியிலேயே ஆட்சியை நடத்த வேண்டும்என்பது அனைவரின்விருப்பமாக உள்ளது என குறிப்பிட்டார் .
பின் குறிப்பு : தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அப்போது முதல்வராக இருந்த ஒபிஎஸ் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார்.
அப்போது, இதே அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தான், மொட்டை அடித்துக் கொண்டு ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து கொண்டு சசிகலா தான் முதலமைச்சாராகவேண்டும் என குறிபிட்டவர். மேலும் ஓபிஎஸ் முதல்வர் பதவிக்கு அன்ஃபிட் என்றும் கூறியிருந்தார் தற்போது இவரே ஒபிஎஸ் அவர்களிடமிருந்து விசுவாசத்தை கற்றுக் கொண்டோம் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .