கட்சிகளை மறந்து ஒரே குரலாக இருப்போம் என்பதை நிரூபித்துள்ளோம். ஜெயக்குமாருடன் நின்று கர்ஜித்த ஆர்.எஸ் பாரதி.

By Ezhilarasan BabuFirst Published Jul 17, 2021, 8:34 AM IST
Highlights

முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தை மனுவாக தந்தோம்.ஒரு மணி நேரம் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினோம். உறுதியாக மேகதாதுவில் அணை கட்ட எந்தவித அனுமதி வழங்க மாட்டோம் என்ற உறுதியை மத்திய மந்திரி கூறினார். 

தமிழக பிரச்சனைக்காக கட்சிகளை மறந்து ஒரே குரலாக இருப்போம் என்பதை நிரூபித்து உள்ளோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் ஆர்.எஸ்.பாரதி சென்னை விமான நிலையத்தில் கூறினார். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அத்தீர்மான நகல்களை மத்திய அமைச்சரிடம் வழங்கி தமிழக அனைத்துக் கட்சி பிரநிதிநிகள் குழுவழங்கியது. 

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மதிமுக பொது செயலாளர்  வைகோ எம்.பி.,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,  பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் காங்கிரஸ் கட்சி சார்பில் கோபண்ணா, 
மனித நேய மக்கள் கட்சி தலைவர்  ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.,பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எம்.எல். பெரியசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.இக்குழு டெல்லியில் மத்திய ஜல் சக்தி துறை மந்திரியை சந்தித்து மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினார்கள். டெல்லி பயணத்தை முடித்து கொண்டு அனைத்து கட்சி பிரதிநிதிகள் சென்னைக்கு திரும்பினார். அப்போது விமான நிலையத்தில்  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில்,

டெல்லியில் தமிழகத்தின் சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சார்பில் 13 பிரதிநிதிகள் பங்கேற்றோம். முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தை மனுவாக தந்தோம்.ஒரு மணி நேரம் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினோம். உறுதியாக மேகதாதுவில் அணை கட்ட எந்தவித அனுமதி வழங்க மாட்டோம் என்ற உறுதியை மத்திய மந்திரி கூறினார். தமிழகத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் கட்சிகளை மறந்து மதங்கள் உள்பட எல்லாவற்றையும் துறந்து தமிழகத்திற்காக குரல் தருவோம் என்பதை இந்த குழு நிரூபித்து உள்ளது.மத்திய மந்திரி தந்த வாக்குறுதியும் நம்பிக்கை அளித்து உள்ளது என்றார்.  

 

click me!