அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என மத்திய மந்திரி கூறியது ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் உள்ளது- ஜி.கே மணி.

By Ezhilarasan BabuFirst Published Jul 17, 2021, 8:25 AM IST
Highlights

தமிழக அரசின் சார்பில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து அனைத்து கட்சி குழு டெல்லி சென்று மத்திய மந்திரியை சந்தித்து வலியுறுத்தி வந்து உள்ளோம். 

அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என மத்திய மந்திரி கூறியது ஆறுதலாகவும், நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது என சென்னை விமான நிலையத்தில் பா.ம.க. தலைவர் ஜி்.கே.மணி தெரிவித்துள்ளார். மேகதாட்டு அணை கட்ட அனுமதிக்க கூடாது என தமிழக அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளது. பின்னர் அந்த குழு சென்னை திரும்பியுள்ளது. அதில் இடம்பெற்றிருந்த, பா.ம.க. தலைவர் ஜி்.கே.மணி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- 

தமிழக அரசின் சார்பில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து அனைத்து கட்சி குழு டெல்லி சென்று மத்திய மந்திரியை சந்தித்து வலியுறுத்தி வந்து உள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முதலமைச்சர் தலைமையில் ஒரே குரலில் ஒலிப்பது தான் பயணத்தின் நோக்கம். மேகதாதுவில் அணை கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் வராது. தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்பதை எடுத்து சொல்லப்பட்டது. விரைவான திட்ட அறிக்கை தயாரிக்க தந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். உடனே திட்ட அறிக்கை அனுமதிக்கு நிறைய காரணங்கள் இருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்தார். 

திட்ட அறிக்கைக்கு அனுமதி தந்தது தவறானது. எல்லாருடைய கருத்தையும் கேட்ட மத்திய மந்திரி அனுமதி வழங்க மாட்டோம். மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்ளாது என்ற தகவலை சொன்னது நம்பிக்கை தருவது போல் இருந்தது. கர்நாடக அரசு பிடிவாதம் செய்வது குறித்து சொன்னோம். நீதிமன்றம் பிரச்சனை, நடுவர் மன்ற தீர்ப்பு உள்பட பிரசச்னையை கடந்து நிறைய அனுமதி தந்ததால் மட்டுமே அணை கட்ட முடியும். ஆனால் அனுமதி வழங்க மாட்டோம் என்று கூறியது ஆறுதல் அளிப்பதாகவும் நம்பிக்கை தருவதாகவும்  இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

 

click me!