சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைக்க நாங்கள் மத்தியஸ்தம் செய்யவில்லை... எல்.முருகன் திட்டவட்டம்..!

By vinoth kumarFirst Published Sep 23, 2020, 4:47 PM IST
Highlights

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தாம் அரசியல் பேசவில்லை என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தாம் அரசியல் பேசவில்லை என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

சென்னை எழும்பூரில் தமிழக பாஜக மாநில மகளிர் அணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்து உடல்நிலையை விசாதித்தேன் என்றார். அதிமுக அமமுக இணைப்புக்கு பாஜக மத்தியஸ்தம் செய்யவில்லை. அதிமுக பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. சசிகலா விடுதலையானாலும் அரசியலில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றார். 


 
மேலும், பேசிய அவர் கருப்பர் கூட்டம் என்ற சிறிய கூட்டம் கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியது. கருப்பர் கூட்டத்தை ஓட ஓட விரட்டிய காவிக் கூட்டத்திற்கு நன்றி. தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அதில் நாம் வெற்றி பெற வேண்டும். கன்னியாகுமாரி தொடங்கி தமிழகம் முழுவதும் பாஜக அலை வீச வேண்டும். மத்திய அரசாங்கம் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் கண் மூடிக்கிட்டு அதை எதிர்ப்பது மட்டுமே ஸ்டாலின் செய்து வருகிறார். விவசாயம் பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? என  எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!