தாயாருடன் சேர்ந்து சிறுமியை சீரழித்ததை ஏற்க முடியாது.. மாஜி அதிமுக எம்எல்ஏவை சாடிய நீதிபதி..!

Published : Sep 23, 2020, 03:45 PM IST
தாயாருடன் சேர்ந்து சிறுமியை சீரழித்ததை ஏற்க முடியாது.. மாஜி அதிமுக எம்எல்ஏவை சாடிய நீதிபதி..!

சுருக்கம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனுக்கு ஜாமீன் வழங்க  உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை மறுத்துள்ளது. 

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனுக்கு ஜாமீன் வழங்க  உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை மறுத்துள்ளது. 

நாகர்கோவிலைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தத் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அதில், பாலியல் சம்பவம் 2017-ல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது எந்தப்புகாரும் அளிக்கவில்லை. உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் ஏற்கெனவே ஜாமீன் மனு தாக்கல் செய்து தள்ளுபடியாகியுள்ளது. தற்போது மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார். வழக்கில் விசாரணை முடியவில்லை. ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் வாழ்க்கையை அவரது தாயாருடன் சேர்ந்து உயர் பொறுப்பு வகித்த ஒருவர் சீரழித்ததை ஏற்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். பின்னர் விசாரணையை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

Durga Puja: துர்கா பூஜை பந்தல்களில் அசைவ உணவா? VHP என்ன சொல்கிறது!
Free Training: விவசாயிகள், இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! தமிழ்நாடு அரசு தரும் இலவச பயிற்சி.! இனி லாபம் கொட்டப்போவது உறுதி.!