எங்கள் வீட்டில் 70 கிலோ போதை மருந்து உள்ளது... யுவன் ஷங்கர் ராஜா மனைவி ஒப்புதல் வாக்குமூலம்..!

Published : May 28, 2021, 04:30 PM IST
எங்கள் வீட்டில் 70 கிலோ போதை மருந்து உள்ளது... யுவன் ஷங்கர் ராஜா மனைவி ஒப்புதல் வாக்குமூலம்..!

சுருக்கம்

எங்கள் வீட்டில் 70 கிலோ போதை மருத்து இருக்கிறது என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி ஸஃப்ரூன் நிஸார் தெரிவித்துள்ளார்.  

எங்கள் வீட்டில் 70 கிலோ போதை மருத்து இருக்கிறது என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி ஸஃப்ரூன் நிஸார் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான புகழ் பெற்றவர் இளையராஜா தனது இந்து மதத்தின் மீதும் அளவற்ற ஈடுபாடு கொண்டவர். அவருடைய இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா 2014ம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார். மேலும், அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றிக்கொண்டார். அதன் பின்னர் 2015ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஸார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2016ம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. 

யுவன் சங்கர் ராஜா தனது தந்தை இளையராஜாவை போலவே இசை ஆர்வலர்களிடையே தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் அவர் எப்போதும் தனது இசையால் படங்களின் வெற்றியை எளிதாக்கியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஸஃப்ரூன் நிஸார் என்பவரை மணந்து இஸ்லாமிற்கு மாறினார். இவர்களுக்கு ஸியா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

ஷாஃப்ரூன் நிஸார் முதன் முறையாக யு1 ரெக்கார்ட்ஸுக்கு வீடியோ நேர்காணலை வழங்கியுள்ளார். அதில் அனைத்து வகையான தனிப்பட்ட கேள்விகளுக்கும் அமைதியாக பதிலளித்தார். அப்போது போதைப்பொருள் வைத்திருப்பதற்கு கட்டணம் செலுத்துகிறீர்களா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த யுவனின் மனைவி ஸஃப்ரூன், “யுவனை தானே நீங்க ட்ரக்ன்னு சொல்றீங்க, ஆமா வீட்லயே 70 கிலோ போதை மருந்து வச்சிருக்கேன். எங்க போனாலும், என்னோட ட்ரக், விட்டமின்ஸ், நியூட்ரியண்ட்ஸ் எல்லாத்தையும் கூடவே எடுத்துட்டு போறேன்” என சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!