
காசு வாங்கிக்கொண்டு ஒட்டு போட்டதாக தமிழக மக்களை குற்றம் கூறும் ஜல்லிக்கட்டு போராளி ஜூலி தற்போது அரசியலுக்கு வருவதாக அறிவித்து மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
வேதனையாகத்தான் இருக்கிறது தமிழகத்தின் அரசியல் சூழலைக் கண்டு, ஜெயலலிதா இறப்பும், கருணாநிதி செயல்படாமல் இருப்பதும் தமிழகத்திற்கு சோதனைக் காலம் தான், இப்போதைக்கு ஒண்ணுமே செய்ய முடியாது. நம்ம ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கூட்டத்தில் ஒருத்தியை குரலை உயர்த்திய ஜாலி பொண்ணு ஜூலி புதுசா ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறாங்களாம்.
சினிமாவில் உள்ளவர்கள் அரசியலுக்கு வருவது புதிது இல்லை தான். ஆனால் தற்போது சற்றும் எதிர்பார்க்காதவர்கள் எல்லாம் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கிறார்கள். தற்போது இருக்கும் சூழலில் தமன்னாவும், யோகிபாபுவும் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை, அட ஆமாங்க, பலவருஷமா எதிர்பார்த்து காத்துக் கிடந்த போதும் வராத ரஜினி இன்னும் இந்தா, அந்தா என்று இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தாறுமாறா தரணி புல்லா ரீச் ஆன நம்ம ஜூலி, முதல்ல பிக்பாஸ், அப்றமா தொலைக்காட்சி தொகுப்பாளினி, இப்போ கோலிவுட் ஹீரோயினி என அடுத்ததாக அரசியலில் அதகளம் பண்ண அரசியல் கட்சிக் போறதா ஒரு மாற்றம் வரும், நாம் அனைவரும் ஒன்றாக வெற்றி பெறுவோம் என கூறி வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ள நிலையில், இன்று மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார்.
அதில், தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் அள்ளிவிடும் வாக்குறுதிகளை பதவிக்கு வந்த பிறகு நிறைவேற்றாவிட்டாலும் நாம் எந்த கேள்வியும் கேட்பது இல்லை என காட்டமாக காசு வாங்கிக்கொண்டு ஒட்டு போட்டதை எதிர்க்கும் ஜூலி விரைவில் களத்தில் சந்திக்கப் போவதாக தெரிவித்து வீடியோவில் கூறியுள்ளார்.