
'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவர் கமலஹாசன், சென்னை ஆழ்வார் பேட்டையில், உள்ள தனது கட்சி அலுவலகத்தில். விவசாய பிரதிநிதிகளுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, காவிரியின் உரிமையை நிலைநாட்ட, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்துள்ளதாகவும். காவிரிக்காக தமிழகத்தில் 'குரல்' என்னும் தலைப்பில் களம் காண உள்ளதாகவும். இதற்கு விவசாயிகளையும், பொதுமக்களையும் அழைக்கிறோம் என்று கூறினார்.
மேலும் மே - 19 ஆம் தேதி விவசாயிகளுக்காக உணர்வுப் பூர்வமாக குரல் தரவும், உரையாடல்களுக்கான கதவைத் திறக்கவும் களம் காண வருமாறு கோரிக்கை விடுத்தார்.