துப்பாக்கியால சுட்டாக்கூட ஓயமாட்டோம்… உங்களால் என்ன செய்ய முடியும் ? கொந்தளித்த துரை முருகன்….

Asianet News Tamil  
Published : Apr 05, 2018, 11:30 AM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
துப்பாக்கியால சுட்டாக்கூட ஓயமாட்டோம்… உங்களால் என்ன செய்ய முடியும் ? கொந்தளித்த துரை முருகன்….

சுருக்கம்

we dont afraid about lathi charge are gund fire told durai mUrugan

போலீச வச்சு அடிச்சாலும் சரி, துப்பாக்கியால சுட்டாலும் சரி, காவிரி மேராண்மை வாரியம் அமைக்கும் வரை கடுமையாக போராடுவோம் என திமுக தலைமை நிலைய செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.  திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் பேரணி நடத்த முயன்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டார். அதே போன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கைது செய்யப்பட்ட வருகின்றனர்.

இந்நிலையில்  திமுக தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான  துரை முருகன் காட்பாடியில் சாலை மறியலில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு பாலுக்கு காவல், பூனைக்கு தோழன் என்ற ரீதியில் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

மேலும் போலீச வச்சு அடிச்சாலும் சரி, துப்பாக்கியால சுட்டாலும் சரி, காவிரி மேராண்மை வாரியம் அமைக்கும் வரை கடுமையாக போராடுவோம் என கொந்தளிப்புடன் தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

கொங்குவை தொடர்ந்து 'டெல்டா' பெண்களின் வாக்குகளுக்கு குறி.. திமுகவின் அடுத்த மாஸ்டர் பிளான்!
'இந்தியாவில் கால் வைத்தால்'.. KKR வங்கதேச வீரருக்கு பாஜக மிரட்டல்.. ஷாருக்கான் தேசத் துரோகி.. விமர்சனம்!