எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அறிக்கை கொடுக்க முடியாது.. நீதியரசர் ஏ.கே.ராஜன் திட்டவட்டம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 8, 2021, 4:37 PM IST
Highlights

நீட் பாதிப்பு ஆய்வு குழுவின் காலத்தை நீடிக்க அரசுக்கு எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை என்றும், சில தரவுகளை ஆராய வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார். நீட் பாதிப்பு ஆய்வு குழுவுக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்கதால், குழுவின் அறிக்கையை தாக்கல் செய்யவது  முறையல்ல

நீட் பாதிப்பு ஆய்வு குழுவுக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், குழுவின் அறிக்கையை தாக்கல் செய்வது முறையல்ல என ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார். நீட்தேர்வால் மாணவர்கள்.பெற்றோர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள், அதனால் நீட் நடைமுறைக்கு வந்தது முதல் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, ஆராய்ந்து அறிக்கை தயாரிக்க, தமிழக அரசு ஒய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைத்தது. 

அந்த குழு பாதிப்புகளை ஆராயும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. பெற்றோர்கள், மாணவர்கள், மற்றும் பொதுமக்களிடம் இருந்து கிட்டத்தட்ட 80 ஆயிரத்திற்கும் அதிகமான புகார்கள் வரப்பெற்றன. அவை அனைத்தையும் ஆராய்ந்து அறிக்கை தாயாரிக்கும் பணிகள் ஓரளவுக்கு நிறைவு பெறும் தருவாயை எட்டிய நிலையில், தமிழக பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன் என்பவர், நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து விளக்க மளிக்க சென்னை உயர்நீதி மன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளதுடன் அதற்கான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நீட் பாதிப்பு ஆய்வு குழுவுக்கு தலைவர் நீதியரசர் ஏ.கே ராஜன், இதுவரை வந்த தரவுகளை ஆய்வு செய்து முடிவு எடுக்கும் தருவாயில் இருப்பதாகவும், தற்போது வரை 90 சதவிகித பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும் தெரிவித்தார். 

நீட் பாதிப்பு ஆய்வு குழுவின் காலத்தை நீடிக்க அரசுக்கு எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை என்றும், சில தரவுகளை ஆராய வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார். நீட் பாதிப்பு ஆய்வு குழுவுக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்கதால், குழுவின் அறிக்கையை தாக்கல் செய்யவது  முறையல்ல என்றும், அரசும் அதை ஏற்காது என்றும் தெரிவித்தார். நீட் தேர்வால் 90 சதவிகித அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பெரும்பாலான மக்கள் நீட் தேர்வுக்கு எதிராக மனுக்கள் அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

click me!