ஊரடங்கு போட்டாலும் முடியாதா..?? 1 கி.மீ சுற்றளவில் 7 ஆயிரம் பேர் வாழ்ந்தால் ஆபத்து.. பகீர் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Jan 13, 2022, 12:20 PM IST
Highlights

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் கொரோனா பரவிய நிலையில் சீனாவின் எப்படி கட்டுப்படுத்தப்பட்டது.? மக்கள் தொகை அதிகம் இருந்தபோதிலும் இந்தியா மற்றும் அமெரிக்காவை விட சீனாவில் கொரோனாவில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தது. 

ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 7,000 பேர் வாழ்ந்தால் கொரோனா அங்கு வேகமாக பரவும் என்றும், அந்த நகரங்களில் முறையாக கையாள படாவிட்டால் ஆபத்து அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

நம் இந்தியர்கள் நெரிசலான தெருக்கள், சந்தைகள் மருத்துவமனைகள் என எல்லா இடங்களிலும் வசிக்கும் வாழ்க்கைமுறையில் இருந்து வருகிறோம். ஒரு வகையில் நம் நாட்டின் மக்கள் தொகையே நம் பலம் என்று நாம் பெருமிதம் கொண்டாலும் கொரோனா விவகாரத்தில் அதுதான் நமக்கு பாதகமாக மாறியுள்ளது. அதிக  கூட்டநெரிசலில் கொரோனா வேகமாக பரவும் என்பது இந்த ஆபத்துக்கான காரணமாக உள்ளது. இந்நிலையில் ஒரு நகரத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 7,000 பேர் வசிக்கிறார்கள் என்றால் அங்கு கொரோனா வேகமாக பரவும், கூட்டத்தை தனக்கு சாதகமாக்கி மக்களை அதே வேட்டையாடும் என ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. எனவே சமூக விலகல், அனைத்து பெரிய நகரங்களிலும் ஊரடங்கு, கூட்ட நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது போன்றவற்றின் மூலம் ஓரளவுக்கு இதை கட்டுப்படுத்த முடியும், ஆனால் முழுவதுமாக வெற்றி அடையுமா? என்பது  கேள்விக்குறியே என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட ஐந்து நகரங்களில் தற்போது கொரோனாவின் நிலை என்ன என்பதை உற்று நோக்கினால் இந்த கேள்விக்கு விடை கிடைத்துவிடும். அமெரிக்க பொறியாளர் ஜான் பிரான் தனது ஆராய்ச்சியின்படி கூட்டத்தை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தாவிட்டால் அது பேரழிவுக்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ளார். அவரின் கூற்றுப்படி ஒரு நகரத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள் என்றால்  அங்கு நிச்சயம் நெரிசல் ஏற்படும் என்றும், அந்தக் கூட்டத்தில் வைரஸ் பரவுவது  ஒரு கால்வாயில் நீர் ஓடுவதற்கு சமம் என்கிறார் அவர். மக்கள் கூட்டம் நோய் பரவலுக்கு சிறந்த ஊடகம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இரண்டாவது அலையின் போது ஆறு நெரிசலான நகரங்களான அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் மட்டும் 16 சதவீதம் அளவுக்கு பாதிப்பு இருந்தது. இரண்டாவது அலையில் இந்தியாவில் கொரோனாவால் இறந்த ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் இந்த நகரங்களில் இறந்துள்ளனர். இப்போது மூன்றாவது அலையிலும் கூட்ட நெரிசலால் இந்த நகரங்களில்தான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.

ஒரு நாளில் மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் இருந்து 28% பதிவாகி உள்ளது. ஜனவரி 11 அன்று நாட்டில் 1.96 லட்சம் கொரோனா தொற்று பதிவானது இவற்றில் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட 5 நகரங்களில் சுமார் 56 ஆயிரம் பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 28 சதவீத பதிவு ஆகும். ஜனவரி 11 செவ்வாய்க்கிழமை டெல்லியில் 21,259  பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக பதிவானது. அந்நாளில் நாட்டின் மொத்த நோய்த் தொற்றுகளில் இது 10 சதவீதம் ஆகும். அதேநேரத்தில் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை 11,647  பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. இந்த நாளில் நாடு முழுவதும் கண்டறியப்பட்ட வழக்குகளில் இது 6 சதவீதம் ஆகும். அதாவது 16 சதவீதம் பாதிப்பு இரண்டு நெரிசலான நகரங்களிலிருந்து மட்டுமே பதிவாகியுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் இந்த ஐந்து நகரங்களிலும் வசிக்கும் மக்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வில்லை என்றால் கொரோனா இன்னும் பெரும் பேரழிவை ஏற்படுத்தக் கூடும்.

அடுத்தபடியாக உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக மும்பை குறிப்பிடப்படுகிறது. மும்பையில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் சராசரியாக 31.7 ஆயிரம் பேர் வாழ்கின்றனர், அதேபோல் டெல்லியில் சராசரியாக ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 11.31 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்,  கொல்கத்தாவில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 24 ஆயிரம் பேரும், அகமதாபாத்தில் 16 ஆயிரம் பேரும், பெங்களூரில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சுமார் 17 ஆயிரம் பேரும் வாழ்கின்றனர். இந்த நகரங்களிலும் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது ஆலையில் அதிக அழிவு ஏற்பட்டது. அதேநேரத்தில் கபூர்தலா இந்தியாவில் குறைந்த மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாகும், இங்கு ஒரு சதுர கிலோமீட்டர் சுற்றளவில் சராசரியாக 537 பேர் வாழ்கின்றனர். இங்கு குறைவான கூட்டம் காரணமாக 0. 04  சதவீதம் குறைவான வழக்குகள் மட்டுமே பதிவானது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி மும்பையில் வசிக்கும் 6 சதவீதத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் கூட்டத்தையும் கொரோனாவையும் தடுக்கும் அரசின் முயற்சி வெற்றி பெறுகிறதா...?

ஒவ்வொரு நிமிடமும் 20 முதல் 30 இந்தியர்கள் வேலைவாய்ப்புக்காக மற்றும் கல்விக்காக நகரத்தை நோக்கி படையெடுக்கின்றனர். இதன்மூலம் நகரங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது . நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 6 சதவீதம் பேர் 6 பெரிய நகரங்களில் வாழ்கின்றனர். இந்த நகரங்களில் அதிகமான மக்கள் குறைந்த இடத்தில் வசிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் படுகின்றனர். அதேசமயம் கொரோனாவை சமாளிக்க சமூக விலகல், மற்றொருவரிடம் இருந்து இரண்டு மீட்டர் இடைவெளியை பேணுவது அவசியம் என்று உலக சுகாதார நிறுவனத்தில் வழிகாட்டுதல் கூறுகிறது. முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் சரியான நேரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்தாததால் தொற்று நோயை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை என்பதை நாம் அறிந்தோம். முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது எவ்விதமான உறுதியான திட்டமும் இல்லாமல்  லாக் டவுன் அறிவிக்கப்பட்டதால் திடீரென புலம்பெயர்ந்தோர் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களுக்கு கால்நடையாக திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. அதேபோன்று ஒரு நிலைமை  ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சீனா மட்டும் எப்படி வென்றது..??

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் கொரோனா பரவிய நிலையில் சீனாவின் எப்படி கட்டுப்படுத்தப்பட்டது.? மக்கள் தொகை அதிகம் இருந்தபோதிலும் இந்தியா மற்றும் அமெரிக்காவை விட சீனாவில் கொரோனாவில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தது. அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நகரங்களில் அதிக மக்கள்தொகை அடர்த்தி காரணமாக இது வேகமாக பரவியது. அதே நேரத்தில் சீனாவின் நகரங்களில் சிறந்த நிர்வாகம் மற்றும் நிர்வாகத்தின் காரணமாக அதிக மக்கள் தொகை அடர்த்தி  இருந்தும் அங்கு தொற்றுநோய் கட்டுப்படுத்த முடிந்தது. சீனாவின் சரியான சுகாதார வசதிகள் மற்றும் கூட்டத்தை சரியாக நிர்வகித்தல் போன்ற திட்டமிடல் அதை சாத்தியப்படுத்தியது என ஜான் பிரான் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 
 

click me!