தமிழகத்தில் விசிலடிக்காத குக்கர்.. மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்.. டிடிவி.தினகரன்..!

By vinoth kumarFirst Published May 3, 2021, 10:46 AM IST
Highlights

தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டன. அதிமுகவை கைபற்றும் நோக்கில் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்துள்ள டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜுவை எதிர்த்து போட்டியிட்டார். அமமுக, தேமுதிக மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல் எதிர்கொண்டது. இந்த கூட்டணி தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் முன்னிலை பெற்றார். அதன் பின்னர், பின்னடைவு, முன்னிலை என தொடர்ந்து மாறி மாறி இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இறுதியாக, கடம்பூர் ராஜு சுமார் 12,000 வாக்கு வித்தியாசத்தில் டிடிவி.தினகரனை வீழ்த்தினார். 

அதேபோல், பல தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. குறிப்பாக பல தொகுதிகளில் அமமுக பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி 3வது இடத்தை பிடித்தது. இந்நிலையில், மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். தேர்தலில் களப்பணி ஆற்றிய கழக உடன்பிறப்புகளுக்கும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று  பதிவிட்டுள்ளார்.

click me!