செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறக்க தயார்.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 11, 2021, 1:37 PM IST
Highlights

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம்.

செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என சுகாதாரத்துறை தமிழக முதல்வரிடம் தெரிவித்தன் அடிப்படையில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். வரும் 27ம் தேதி பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை நடைபெறவுள்ள நிலையில் அது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெருவித்தார். இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் இருந்து 2 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளார். அந்த மாணவர்கள் இடை நிற்காமல் அரசு பள்ளிகளில் தொடர்ந்து கல்வி பயில சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.

பெரும்பான்மையான ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தடுப்பூசி போடதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்குகிறது என அவர் தெரிவித்தார். பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்? செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என சுகாதாரத்துறை தமிழக முதல்வரிடம் தெரிவித்தன் அடிப்படையில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

 

click me!