
மாட்டிறைச்சி மீதான தடையைக் கண்டித்து கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் வரிந்து கட்டிக் கொண்டு வேலைபார்த்து வருகிறது.
ஆனால் தமிழக அரசு இதுவரை ஒரு அறிக்கையைக் கூட வெளியிடமால் மெளனம் சாதித்து வருகிறது.ஆனால் அரசு மீது நம்பிக்கை வைக்காமல் இந்த முறையும் மாணவர்களே போராட்ட விதையை ஐ.ஐ.டி. வளாகத்தில் வைத்து விதைத்துள்ளனர்.
மாட்டுக்கறி விருந்து நடத்திய சூரஜ் என்ற மாணவர் தாக்கப்பட்டதன் காரணமாக மாணவ அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
இந்தச் சூழலில் டெல்லி சென்று நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்த பின் மக்களவை துணை சபாநாயகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், " தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய 17 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க கோரிக்கை விடுத்தோம். அவரும் நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி மீதான மத்திய அரசின் தடையில் அதிமுகவுக்கு உடன்பாடில்லை."
"மாட்டிறைச்சி விருந்து நடத்திய சூரஜ் என்ற மாணவர் தாக்கப்பட்டது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது.அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அதிமுக அரசு செயல்படும். பிளவுபட்டுள்ள இரு அணிகளும் விரைவில் ஒன்றுபடும். சில கருத்து வேறுபாடுகளே உள்ளன." இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்.