ஆப்கன் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு - பிரணாப்முகர்ஜி, மோடி கடும் கண்டனம்

First Published May 31, 2017, 5:33 PM IST
Highlights
Indian president pranap and pm modi condemn kabul attack


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தூதரகங்கள் நிறைந்த பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரில் வந்த தீவிரவாதிகள் அதனை வெடிக்கச் செய்ததில் சம்பவ இடத்திலேயே 50 உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 30 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 

தாலிபான் தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையே இத்தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஆப்கன் அதிபருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "காபூலில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில், ஆப்கன் மக்களுடன் இந்தியா துணை நிற்கும். எந்த சூழ்நிலையிலும் இது போன்ற தாக்குதல்களை ஏற்று கொள்ள முடியாது."இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

பிரமர் மோடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "காபூல் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களின் நினைவாக உள்ளோம். பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் ஆப்கனுடன் இந்தியா துணை நிற்கும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும்."  இவ்வாறு தனது செய்திக் குறிப்பில் மோடி தெரிவித்துள்ளார். 

click me!