நாங்க அன்றே சொன்னோம்.. திமுக இன்னொரு பொய்யை சட்டப்பேரவையில் ஒத்துக்கொண்டது.. அண்ணாமலை தாறுமாறு.!

Published : May 07, 2022, 09:48 PM IST
நாங்க அன்றே சொன்னோம்.. திமுக இன்னொரு பொய்யை சட்டப்பேரவையில் ஒத்துக்கொண்டது.. அண்ணாமலை தாறுமாறு.!

சுருக்கம்

கடந்த மாதம் நடந்த 2 கொலைகளில் மட்டும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎப்ஐ) நேரடியாக சம்பந்தப்பட்டு உள்ளது. தமிழக ஆளுநர் உளவுத்துறை அளவில்தான் இதை பேசி உள்ளார். 

பழைய பென்சன் திட்டத்தை தொடக்கத்திலேயே இது நடைமுறை சாத்தியம் இல்லை என்று பாஜக் சொன்னது. நாங்கள் சொன்னதைதான் தற்போது நிதியமைச்சர் சட்ட பேரவையில் கூறியுள்ளார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரையில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்துவோம் என திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியதை நம்பி லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் திமுகவுக்கு நேரடியாக வாக்களித்தார்கள். ஆனால், பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியம் இல்லை என்று தொடக்கத்திலேயே கூறியது. நாங்கள் அன்று சொன்னதைதான் தற்போது நிதியமைச்சர் சட்ட பேரவையில் அறிவித்துள்ளார். தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன இன்னொரு பொய்யை பொய் என்று சட்டப்பேரவையிலேயே ஒத்துக்கொண்டுள்ளது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு, ஆழப்புழா, பாலக்காடு போன்ற பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 66 கொலைகள் நடைபெற்றுள்ளன. கடந்த மாதம் நடந்த 2 கொலைகளில் மட்டும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎப்ஐ) நேரடியாக சம்பந்தப்பட்டு உள்ளது. தமிழக ஆளுநர் உளவுத்துறை அளவில்தான் இதை பேசி உள்ளார். கடந்த 50 ஆண்டுகள் உள்நாட்டு பாதுகாப்பில் இருந்த ஒருவர், அவ்வாறு பேசியிருக்கிறார். இதை அரசியல் ஆக்க கூடாது. உண்மை என்னவோ அதைத்தான் ஆளுநர் சொல்லியுள்ளார். தமிழகத்துக்குக் கூடுதலாக நிலக்கரி தேவை உள்ளது. அதைச் சமாளிக்க முடியவில்லை என சொல்கின்றனர். கோல் இந்தியாவில் 2.2 டன் நிலக்கரி உள்ளது. தமிழக அரசு கோல் இந்தியா நிலக்கரி மீது பழி போடுவதை ஏற்க முடியாது.

கோல் இந்தியாவை பொறுத்தவரை எந்தக் குறையும் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்டுகள் பராமரிப்பில் உற்பத்தி செய்தால் 1,100 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். எனவே கோல் இந்தியாவில் பற்றாக்குறை எனச்சொல்வது ஒரு பொய். தற்போது தமிழகத்தில் மின்தடையைச் சீராக்க யூபிஎஸ்தான் தேவை. இதுபோல தமிழ்நாட்டுக்கு ஜெனரெட்டேரும் தேவை. வருங்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் நாமே மின்சாரத்தை தயார் செய்யும் நிலை உள்ளது” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!