அட்ராசக்கை.. 10000 பேருக்கு அரசு வேலை.. அமைச்சரே வெளியிட்ட அதிரடி தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Jul 5, 2021, 5:46 PM IST
Highlights

போக்குவரத்துத்துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரம் நபர்கள் வேலைக்கு எடுக்க வேண்டி உள்ளது என்றும், முதல்வரிடம் ஆலோசித்து பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 7291 சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துறை  அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர், 19,200 பேருந்துகளில் இன்று 14715 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், நாளை முதல் 2300 ஏசி பேருந்துகளை தவிர்த்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் கூறினார். மேலும், போக்குவரத்துதுறைக்கு நல்ல வருமானம் வருவதாக கூறிய அவர், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிபேருந்துகள் இயக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். 

போக்குவரத்துத்துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரம் நபர்கள் வேலைக்கு எடுக்க வேண்டி உள்ளது என்றும், முதல்வரிடம் ஆலோசித்து பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். பேருந்துகளில் திருக்குறள் பலகை வைக்கும் பணி நடைப்பெற்று வருவதாக கூறிய அவர்,10 நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்படும் எனவும் கூறினார். தமிழகம் முழுவதும் 7291 சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், அதில் அதிகபட்சமாக சென்னையில் 1550 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வரும் 12ம் தேதி முதல் இலவச பயண டிக்கெட் பேருந்துகளில் வழங்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக, வீட்டு வசதித்துறை அமைச்சருடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கப்படும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 8 போட வேண்டாம் என மத்திய அரசின் உத்தரவு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவெடுக்கப்படும் என்றும், போக்குவரத்து துறையில் இடைத்தரகர்கள் இல்லாமல், ஊழல் இல்லாத பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் அமைச்சர் உறுதிப்பட கூறினார்.

 

click me!