இபிஎஸ் முதல்வராக இருந்த போது கொடநாடு சம்பவத்தில் தடயம் அழிக்கப்பட்டதா? டிடிவி. தினகரன் அதிர்ச்சி தகவல்.!

By vinoth kumar  |  First Published Jul 15, 2023, 1:10 PM IST

மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் உள்ளது எடப்பாடி பழனிசாமி அணியினர் தான். DMK Files 2-ஐ  அதிக ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 


எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொடநாடு சம்பவம் தொடர்பான தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். 

சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் உள்ளது எடப்பாடி பழனிசாமி அணியினர் தான். DMK Files 2-ஐ  அதிக ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கூட்டணி இல்லை என்றாலும் தனித்துப் போட்டியிடுவதற்கு தயாராக உள்ளோம். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை என்றார்.

Latest Videos

undefined

இதையும் படிங்க;- உயிரையே பறிக்கும் நிலைக்கு பெயர் தான் திராவிட மாடலோ? திமுகவை விளாசும் நாராயணன் திருப்பதி..!

மேலும், இபிஎஸ் ஆட்சியில் கொடநாடு சம்பவம் தொடர்பான தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. உண்மையான குற்றவாளிகளை அரசு தண்டிக்க வேண்டும்.

கொடநாடு சம்பவம் நடைபெற்ற போது துணை முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நடைபெறும் போராட்டங்களுக்கு எங்களின் ஆதரவும் உண்டு என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  கே.எஸ்.அழகிரியின் தீவிர ஆதரவாளரின் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு! என்ன காரணம்? அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.!

click me!