வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.. 3 மாதங்களில் என்ஜின்களையே மாற்ற திட்டம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு .

By Ezhilarasan BabuFirst Published Jul 12, 2021, 1:10 PM IST
Highlights

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் இனி பெட்ரோலிய எரிபொருள் மற்றும் இயற்கை எரிபொருள் இரண்டையும் பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் எஞ்சின்கள் பொறுத்துவதை கட்டாயமாக்குவது குறித்து இன்னும் 3 மாதங்களில் முடிவு செய்யப்படும், 

பெட்ரோல் விலை ஏற்றம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாகனங்களுக்கு மாற்று எரி சக்தியை பயன்படுத்துவதன் மூலம் விலையேற்றத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் வாகனங்களில் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிபொருள் இரண்டையும் பயன்படுத்தும் வகையிலான பிளக்ஸ் இன்ஜின்கள்பொருத்துவதை கட்டாயமாக்குவது பற்றி மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதை உடனே தடுக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், அரசுதரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் நாக்பூரில் முதல் திரவ இயற்கை எரிவாயு ஆலையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-  நாட்டில் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது. இதனால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர், பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக உயிரி எரிபொருள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பெட்ரோலுக்கு மாற்றாக தற்போது எத்தனால் பயன்படுத்தப்பட்டு வருகிறது, எத்தனாலை பெட்ரோலுடன் ஒப்பிடும் போது அதனுடைய கலோரி மதிப்பு குறைவாக இருந்தாலும், ஒரு லிட்டருக்கு குறைந்தது 20 ரூபாய் வரை சேமிக்க உதவும், மத்திய அரசு பெட்ரோல் டீசல் மற்றும் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்ய 8 லட்சம் கோடி ரூபாயை  செலவிட்டு வருகிறது. இது நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய சவாலாகும், எனவே செலவை குறைக்க மாசு இல்லாத உள்நாட்டு எத்தனால் உயிரி இயற்கை எரிவாயு, திரவ இயற்கை எரிவாயு மற்றும் ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பது குறித்து அரசு கொள்கை உருவாக்கியுள்ளது. நாட்டில் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் அரிசி, சோளம் மற்றும் கரும்பு போன்றவை வீணாவதை தடுக்கவும், அவற்றை எரிபொருளாக மாற்றவும் முடியும்.

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் இனி பெட்ரோலிய எரிபொருள் மற்றும் இயற்கை எரிபொருள் இரண்டையும் பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் எஞ்சின்கள் பொறுத்துவதை கட்டாயமாக்குவது குறித்து இன்னும் 3 மாதங்களில் முடிவு செய்யப்படும், கனடா, அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் பிளக்ஸ் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு வாகனங்கள் இயங்கி வருகின்றன. பிளக்ஸ் இன்சின்களின் விலை பெட்ரோல் இன்ஜின்களின் விலையை ஒத்து இருக்கிறது. பெட்ரோல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில் பிளக்ஸ் என்ஜின்கள் எரிபொருள் செலவை மட்டுப்படுத்தும், ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் பிளக்ஸ் இன்ஜின்களை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
 

click me!