அடிதூள்.. தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகள். அமைச்சர் மா.சு குட்நியூஸ்.

By Ezhilarasan BabuFirst Published May 12, 2021, 5:25 PM IST
Highlights

அப்போது, கொரனோ சூழ்நிலையிலும் தொடர்ந்து சேவை செய்துவரும் செவிலியர்களை அவர் பாராட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் படுக்கைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

சென்னையில் கூடுதலாக 3 ஆயிரம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை அறைகளும், குறிப்பாக தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகளும் அமைக்க பணிகள் நடந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரசால் மக்கள் கூட்டங்கூட்டமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரசால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெரும்பாலானோர் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு உயிரிழக்கும் சோகம் தொடர்கிறது. 

எனவே இந்த இரண்டாவது அலை மிக ஆபத்தானதாகவும், மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதாகவும் உள்ளதால் இந்த வைரஸ் எதிர் கொள்வதில் அரசு இயந்திரம் வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. இந்நிலையில் ஸ்டாலின் தலைமையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, இந்த வைரஸை எதிர்கொள்ளவதில் தீவிரமாகவும் வேகமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக செவிலியர் தினத்தை ஒட்டி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 

அப்போது, கொரனோ சூழ்நிலையிலும் தொடர்ந்து சேவை செய்துவரும் செவிலியர்களை அவர் பாராட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் படுக்கைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. நோயாளிகள் பல மணி நேரம் ஆக்சிஜன், மருந்துக்காக காத்திருக்கும் சூழலைத் தவிர்க்க, படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்படுத்த சுகாதாரத் துறை முழுவீச்சில் பணிகளில் ஈடுபட்டு வருகிறது, வருங்காலங்களில் படுக்கைகளுக்காக காத்திருக்கும் சூழல் ஏற்படாமல் இருக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னையில் கூடுதலாக 3000 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
 

click me!