அடிதூள்.. 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. வாக்களிப்பதில் விறுவிறுப்பு, மக்கள் ஆர்வம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 6, 2021, 9:39 AM IST
Highlights

தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தபடி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த தேர்தல் என்பதால் இன்று காலை முதலே ஆர்வத்துடன் வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்களுக்கு சாரை சாரையாக படையெடுத்து வருகின்றனர். 

நிறுத்திவைக்கப்பட்டிருந்த 9 மாவட்டங்களுக்கான முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் விறுவிறுப்பாகவும், அமைதியான முறையிலும் வாக்குப்பதிவு நடந்துவரும் நிலையில், ஒரு சில இடங்களில் சில குளறுபடிகள் காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவ, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கான முதற்கட்டமாக வாக்குபதிவு இது காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டுலயே கொடுத்து வைத்த தொகுதின்னா அது இதுதான்.. அள்ளிக்கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.

தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தபடி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த தேர்தல் என்பதால் இன்று காலை முதலே ஆர்வத்துடன் வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்களுக்கு சாரை சாரையாக படையெடுத்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6 மற்றும் 9 ஆகிய 2 தேதிகளில் இரு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது, கடந்த 10 தினங்களுக்கு மேலாக பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக, அதிமுக, பாமக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் உள்ளூரில் மக்கள் செல்வாக்கு உடையவர்கள் சுயேட்சையாகவும் களமிறங்கியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: குப்பைக்கு தங்க மோதிரம் வழங்கிய அதிமுக.. அமைச்சர் மா.சு வெளியிட்ட பகீர் புகார்.

9 மாவட்டங்களில் 7,921 ஒரு வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 39 ஊராட்சி  ஒன்றியங்களில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. 78 மாவட்ட கவுன்சிலர்க, 755 ஒன்றிய கவுன்சிலர்கள், 1577 கிராம ஊராட்சி தலைவர்கள், 12,652 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள இந்த வாதம் பதிவு மாலை 6 மணி முறை நடைபெற உள்ளது. வாக்கு பதிவு மையங்கள் இணையதளம் மூலமாக கண்காணிக்க தமிழக தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் அக்டோபர் 12ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

click me!