தமிழ்நாட்டுலயே கொடுத்து வைத்த தொகுதின்னா அது இதுதான்.. அள்ளிக்கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Oct 6, 2021, 9:09 AM IST
Highlights

திருவிக நகர் 5வது தெருவில் 7500 சதுர அடி பரப்பளவில் ரூபாய் 50 லட்சம் செலவில் செயற்கை நீரூற்று, சிறுவர் விளையாட்டுக் கருவிகள், யோகா கூடம், நடைபாதை வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி பூங்காவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 97.49  லட்சம் மதிப்பீட்டிலான கலையரங்கம், விளையாட்டுத்திடல் மற்றும் பூங்காவை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் எவர்வின் பள்ளியில் தற்காலிகமாக செயல்பட உள்ள அரசு கலைக் கல்லூரி கட்டடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செம்பியம் ரெங்கசாமி தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில்  15. 31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலையங்கத்தை திறந்து வைத்தார்.மேலும், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்து பாராட்டினார். அடுத்து செம்பியம் பார்த்தசாரதி தெருவில் 26.18 லட்சம் செலவில், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், இறகுப்பந்து மைதானம் உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு திடலை திறந்துவைத்து பார்வையிட்டார். 

அதனைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அலுவலகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் மற்றும் கல்வி உதவித்தொகை தொகுதி மக்களுக்கு மருத்துவ உதவித்தொகை, திருமண உதவித்தொகை, 3 சக்கர மோட்டார் வாகனங்கள். தள்ளுவண்டிகளில் காது கேட்கும் கருவிகள், மீன்பாடி வண்டிகள் என 48 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதேபோல் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொளத்தூர் எவர்வின் பணியை தற்காலிகமாக அமைய உள்ள அரசு கலைக் கல்லூரி கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் திருவிக நகர் 5வது தெருவில் 7500 சதுர அடி பரப்பளவில் ரூபாய் 50 லட்சம் செலவில் செயற்கை நீரூற்று, சிறுவர் விளையாட்டுக் கருவிகள், யோகா கூடம், நடைபாதை வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி பூங்காவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல்வரின் இந்த மக்கள் நல திட்டங்கள் கொளத்தூர் பகுதி மக்களை மிகுந்த மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
 

click me!