அடிதூள்.. 87% சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி.. கொரோனாவை தூக்கி போட்டு மிதிக்கும் தமிழகம்.

Published : Feb 09, 2022, 01:05 PM IST
அடிதூள்..  87% சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி.. கொரோனாவை தூக்கி போட்டு மிதிக்கும் தமிழகம்.

சுருக்கம்

குறிப்பாக சென்னையில் 88 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது, கடந்த முறை சென்னையில் சென்னை இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது அது 10 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் 87% சதவிகிதம் நபர்களுக்கு கொரோனோவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக 4 வது குருதி சார் முடிவில் கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மூன்றாவது குருதி சார் முடிவில் சென்னையில் 88 % பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. மூன்றாவது ஆய்வில் 70% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்த நிலையில் நான்காவது ஆய்வில் 87% சதவீதமாக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரொனா பாதித்த நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பதை கண்டறிவதற்காக  4 ஆம் குருதி சார் ஆய்வு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநியோகம் தலைமையில் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரொனா தொற்று அதிகம் பாதித்த இடங்களான 1076 இடங்களில் 10- 18 வயது உடையவர்கள்,  ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், ஒரு தவணை தடுப்பூசி செய்துகொண்டவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், கொரொனா பாதிக்கப்பட்டவர்கள் என மொத்தமாக 32245 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

தற்போது இந்த ஆய்வின் முடிவில் 28071 பேர் அதாவது 87 % பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது. அதிலும் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டத்தில் 93 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது, அதேபோல குறைந்தபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 82 % சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.முன்னதாக முதல் ஆய்வு கடந்தாண்டு ஆகஸ்ட்  மாதத்தில் நடத்தப்பட்டது. அப்பொழுது, 22,690 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் தமிழகத்தில் 32% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கொரோனோ இரண்டாவது அலை பரவல், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம் ஆகியவை காரணமாக ஏற்பட்டுள்ள வேறுபாடுகள் குறித்து இரண்டாவது கட்ட SERO சர்வே அண்மையில் நடத்தப்பட்டது கடந்தாண்டு நவம்பர் முதல் மார்ச் வரை நடத்தபட்ட இந்த ஆய்வில் நோய் எதிர்ப்பு சக்தி 32% லிருந்து 29% ஆக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், மூன்று அலை வருவதற்கு முன்னதாகவே எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவில் 70 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்தது. 

மேலும், மூன்றாம் அலை தொடங்கப்பட்ட பின்னதாக எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவில் தற்பொழுது எண்பத்தி ஏழு சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் 88 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது, கடந்த முறை சென்னையில் சென்னை இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது அது 10 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல, 10-18 வயதுடையவர்களில் 1865 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1275 பேர் அதாவது 68.4% பேருக்கும், 18-44 வயதுடையவர்களில் 14965 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 13396 (89.5%) பேருக்கும் 45-59 வயதுடையவர்களில்
9095 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 8059 (88.6%) பேருக்கும்,  60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 6320 பேருக்கு  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 5341 (84.5%) பேருக்கும் என மொத்தமாக 32245 பேருக்கு பரிசோதனை செய்ததில் 28071( 87%) பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது தெரிய வந்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!