
ஜல்லிக்கட்டுக்கு தடைநீக்கி ஒத்துழைப்பு கொடுத்து சட்டம் கொண்டு வர உதவிய பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் . இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழினம் உள்ளது என்றும் சசிகலா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக மக்களூக்கும் ,இளைஞர்களுக்கும் , மாணவச்செல்வங்களுக்கும் நம் கலாச்சாரம் காக்க ஒன்றிணைந்து போராடிய போராட்டக்காரர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
அம்மா வழியில் தொடர்ந்து நடக்கும் இந்த அரசும் , நமது இயக்கமும் 30 ஆண்டுகளுக்கு முன் உலகம் கொண்டாடிய பிலிப்பைன்ஸ் புரட்சி என உலக நாடுகள் முழுதும் கொண்டாடும் நிகழ்வு போன்று இளைஞர்கள் , மாணவர்கள் போராட்டம் மூலம் வெற்றி கண்ட , இளம் தமிழா உன்னை காண உள்ளம் துள்ளுது.
தமிழனம் உலகத்துக்கே வழிக்காட்டும் என்பதை ஜல்லிக்கட்டுக்கான அறப்போராட்டம் உணர்த்தியுள்ளது. தமிழர் பாரம்பரியம் கலாச்சாரம், உரிமைக்காக உழைத்த அம்மா ஜல்லிக்கட்டு நடத்திட பிரதமரையும் மத்திய அரசையும் வலியுறுத்தி வந்தார்.
புரட்சித்தலைவியின் அடிச்சுவடியை பின்பற்றி நடக்கும் நானும் அறிக்கை வெளியிட்டதோடு அல்லாமல் , நமது எம்பிக்கள் , கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அனுப்பி பிரதமரை சந்தித்து வலியுறுத்த ஆவன செய்தேன்..
கழக பொருளாளர் முதலமைச்சர் ஓபிஎஸ் பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டை சட்டரீதியாக நடத்த ஆவன செய்தார். அம்மா வழியில் அடிபோடும் நானும் , தமிழக அரசும் கண்ணியத்தோடும் போராடிய தமிழக இளைஞர்களுக்கும் , உறுதுணையாக இருந்த பாரத பிரதமருக்கும் , மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
கண்ணியமிக்க போராட்டம் மூலம் முயற்சிகள் எடுத்து அறவழியில் போராட்டம் நடத்தி வெற்றிகரமாக ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியது , இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக உள்ளது.
போராட்ட களத்தில் அமைதியை நிலைநாட்டி கடமையாற்றிய போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.. சட்ட அங்கீகாரத்துடன் ஜல்லிக்கட்டை அரசு நாளை நடத்துகிறது.
இதில் உறுதியாக ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. ஜல்லிக்கட்டு நடக்க இருப்பதை முன்னிட்டு மாணவச்செல்வங்கள் , இளைஞர்கள் கல்வி கற்பது உள்ளிட்ட பொறுப்புக்களை நினைத்து போராட்டத்தை கைவிட்டு ஒத்துழைப்பு அளிக்கும் படி அருள் கூர்ந்து கேட்டு கொள்கிறேன் இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.