கவர்னருடன் முதல்வர் ஓபிஎஸ் அவசர சந்திப்பு..!!!

 
Published : Jan 21, 2017, 03:35 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
கவர்னருடன் முதல்வர் ஓபிஎஸ் அவசர சந்திப்பு..!!!

சுருக்கம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற அவசர சட்டம் ஜனாதிபதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இதுகுறித்து ஆலோசனை நடத்த கவர்னரை முதல்வர் ஓபிஎஸ் சில மணி நேரங்களில் சந்தித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் இயக்கம் மிகப்பெரிய அளவில் எழுச்சி பெற்று நடந்து கொண்டிருக்கிறது.

இதனுடைய எதிரொலியாக தமிழக முதல்வர் ஓபிஎஸ் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார்.

மாநில அரசும் மத்திய அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவசர சட்டம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினர்.

அப்போது மத்திய சட்ட அமைச்சகம் உள்துறை அமைச்சகம் அனுமதி பெற்று தற்போது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.

குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த மறுகணமே கவர்னருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவசர சட்டம் பிறப்பித்து கவர்னர் அறிவிப்பார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 5வது நாளாக போராட்டம் வலுபெற்று வருவதால் மாநில அரசு பதற்றத்தில் உள்ளது.

சட்டம் ஒழுங்கு குறித்து டிஜிபி உடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஓபிஎஸ் அடுத்து கவர்னரை சந்திக்க உள்ளார்.

ஒருவேளை ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்துவிட்டால் கவர்னர் மாளிகையின் வாயிலேலேயே அதற்கான செய்தியை வெளியிட வாய்ப்புள்ளது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு