டாஸ்மாக் கடைகளை திறந்த அரசு கோவில்களை திறக்காதா..?? ஆலயங்களை திறக்க வலியுறுத்தி போராட்டம்..!!

By Ezhilarasan BabuFirst Published May 26, 2020, 7:51 PM IST
Highlights

வழிபாட்டு மையங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பின் தலைமையில் தோப்புக்கரணம் போடும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
 

வழிபாட்டுக்காக ஆலயங்களை திறக்க வலியுறுத்தி சாத்தூரில் உள்ள சிவன் கோவில் முன்பு விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பின் தலைமையின் கீழ் நான்கு உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து தோப்புக்கரணம் போடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் கடந்த 60 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடைகள் மற்றும் வழிபாட்டு மையங்கள் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 

இதனால் கோயில்கள்,  மசூதிகள், சர்ச்சுகள் என அனைத்தும் மூடப்பட்டது, இந்நிலையில் கடந்த மே 17 முதல் ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் கடைகள் , சலூன்கள் மற்றும் அரசு மது பானக்கடைகள் வரை அனைததும் திறக்கப்பட்டுள்ளது . எனினும் வழிபாட்டு மையங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பின் தலைமையில் தோப்புக்கரணம் போடும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள சிவன் கோவில் முன்பு விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பின் தலைமையின் கீழ் நான்கு உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து தோப்புக்கரணம் போடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மற்றும் அரசு மதுபானக்கடைகள் வரை திறந்த அரசுக்கு மக்கள் வழிபாட்டிற்கு மறுத்து கோவில்களை திறக்காததை கண்டிக்கிறோம், எனக் கோஷங்கள் எழுப்பி தோப்புக்கரணம் போட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
 

click me!