அரைவேக்காடு விஷால்...! உள்ளாட்சி தேர்தல் ஆணையருக்கு கடிதம் கொடுத்த காமெடி..!

 
Published : Dec 06, 2017, 06:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
அரைவேக்காடு விஷால்...! உள்ளாட்சி தேர்தல் ஆணையருக்கு கடிதம் கொடுத்த காமெடி..!

சுருக்கம்

vishal wrote the letter wrongly to tamilnadu state election commission

அரைவேக்காடு விஷால்...! உள்ளாட்சி தேர்தல் ஆணையருக்கு கடிதம் கொடுத்த காமெடி..!

ஆர்.கே நகரில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அலுவலர்  நிராகரித்தது குறித்து நடிகர் விஷால் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் புகார் மனு அளித்தார்

அந்த கடிதத்தில்,பெறுநர் என்ற இடத்தில், தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு பதிலாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் என்று குறிப்பிட்டு உள்ளார்

இது மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் மேலும் நகைப்புக்கு உள்ளாகி உள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

அண்ணா நகர் வீட்டிலிருந்து தினமும் வடபழனி செல்லும் விஷாலுக்கு,100 அடி  சாலையில்,கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தை பார்த்து பார்த்து பழகி விட்டதால்,தேர்தல் என்றவுடனே  எந்த தேர்தல் என்பது கூட தெரியாமல், யார் பெயருக்கு புகார் கொடுக்க வேண்டும் என்பது கூட தெரியாமல தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் கொடுத்துள்ளார்

அதாவது,உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடிய கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முகவரியை குறிப்பிட்டு, தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் புகார் மனுவை  கொடுத்துள்ளார்.

ஆனால் ராஜேஷ் லக்கானியின் அலுவலகம் இருப்பதோ, தலைமை  செயலகத்தில்....இதிலிருந்து வேட்பு மனுவில் மட்டுமில்லை....புகார் மனுவிலும் முகவரியை மாற்றி அசிங்கப்பட்டு விட்டார் விஷால்

ஏற்கனவே வேட்புமனு கூட சரியாக செய்ய தெரியவில்லை என விஷாலை அவர் எதிர்ப்பாளர்கள் விமர்சித்து வரும் நிலையில்,புகார் கடிதத்தையும் தவறாக மாநில தேர்தல் ஆணையர் என குறிப்பிட்டுள்ள சம்பவம் பெரும் காமெடியாக பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!