விஷாலை முன்மொழிந்த 2 பேர் மாயம் - வரிந்து கட்டும் விஷால் ; வகைவகையா உருவாகும் பரபரப்பு 

 
Published : Dec 06, 2017, 06:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
விஷாலை முன்மொழிந்த 2 பேர் மாயம் - வரிந்து கட்டும் விஷால் ; வகைவகையா உருவாகும் பரபரப்பு 

சுருக்கம்

In RKNagar 2 voters who proposed the actor Vishal are magic.

ஆர்.கே.நகரில் நடிகர் விஷாலை முன்மொழிந்த 2 வாக்காளர்கள் மாயமாகினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. 

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட நடிகர் விஷால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

இந்த நிலையில் நடிகர் விஷால், வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துக்கள் உள்ளதாகவும், சொத்து கணக்கு விவரங்கள் முறையாக குறிப்பிட்டதாலும் அவருடைய மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்துதண்டையார் பேட்டை சென்ற விஷால் தமது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இரண்டாவது முறையாக தேர்தல் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்திய விஷால் தகுந்த வீடியோ ஆதாரமும், ஆடியோ ஆதாரமும் இருப்பதாக தெரிவித்தார். 

இந்நிலையில், மிரட்டப்பட்டதாக கூறப்படும் வேலு என்பவரிடம் தான் பேசிய ஆடியோவை நடிகர் விஷால் வெளியிட்டார். இதையடுத்து ஆதாரத்தின் அடிப்படையில் விஷாலின்  வேட்பு மனு ஏற்கப்பட்டது. 

ஆனால் சில மணிநேரங்களில் மீண்டும் வேட்புமனுவை நிராகரித்து அதிகாரப்பூர்வமாக தேர்தல் அலுவலர் வேலுசாமி தெரிவித்தார். 

இதையடுத்து ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் நடிகர் விஷால் மனு அளித்து முறையீடு செய்துள்ளார்.  

இந்நிலையில், விஷாலை முன்மொழிந்த சுமதி, தீபன் இருவரும் அவர்களது வீட்டில் இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!