தயாரிப்பாளர் சங்கத்துக்கு என்ன செஞ்சிட்டீங்க...! இப்போ ஆர்.கே.நகருக்கு போயிட்டீங்க...! விஷாலை விரல் காட்டி தாக்கும் சேரன்!

 
Published : Dec 04, 2017, 04:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
தயாரிப்பாளர் சங்கத்துக்கு என்ன செஞ்சிட்டீங்க...! இப்போ ஆர்.கே.நகருக்கு போயிட்டீங்க...! விஷாலை விரல் காட்டி தாக்கும் சேரன்!

சுருக்கம்

Vishal should step down from the post

தயாரிப்பாளர் சங்கத்துக்கு என்ன செஞ்சிட்டீங்க...! இப்போ ஆர்.கே.நகருக்கு போயிட்டீங்க...! விஷாலை விரல் காட்டி தாக்கும் சேரன்! 

நடிகர் விஷால் அரசியலில் நிற்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை; தயாரிப்பாளர்களுக்கு எதிரான ஒரு சிறுபிள்ளைத்தனமான விஷயமாக விஷாலின் நடவடிக்கை உள்ளது என்று தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

நடிகர் சங்க தலைவரும், தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகருமான விஷால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகியபோதே தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் சார்பற்று தயாரிப்பாளர் சங்கம் செயட்பட்டு வருகிறது என்றும், அதில் அரசியல் கலப்பதை ஏற்க முடியாது என்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கூறி வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் விஷால் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதற்காக, சென்னை தண்டையார்போட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் இயக்குநரும், நடிகருமான சேரன் மற்றும் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் இன்று தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இன்று பேட்டி அளித்தனர்.

அப்போது பேசிய விஷால், விஷால், ஆர்.கே.நகரில் போட்டியிடட்டும், அசோக் நகரில் போட்டியிடட்டும், கே.கே.நகரில் போட்டியிடட்டும். ஆனால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நிற்கட்டும் என்று கூறினார்.

விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவராக 8 மாத காலமாக எதுவும் நல்லது நடக்கவில்லை என்றும், எந்தவித வாக்குறுதிகளும் நிறைவேற்றவில்லை. அவர் வெறும் அறிவுப்புக்களுக்காகவும், பணத்துக்காகவும் மீடியாக்களுக்காகவுமே வாழ்கிறார் என்று கூறினார்.

அவரின் அடையாளத்துக்காக நாங்கள் பலியாக விரும்பவில்லை. நடிகர் விஷால் அரசியலில் நிற்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. தயாரிப்பாளர்களுக்கு எதிரான ஒரு சிறுபிள்ளைத்தனமான விஷயமாக விஷாலின் நடவடிக்கை உள்ளது என்றார்.

தயாரிப்பாளர் சங்கம் என்பது ஆளும் அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும். அவர் அமைச்சர்களை மிரட்டும் வகையில் பேசியிருப்பது பிரச்சனையை உருவாக்கும் என்றார். விஷாலின் தேர்தல் போட்டியார் தயாரிப்பாளர் சங்கம் பாதிக்கப்படும். நடிகர் சங்கத்துக்கும் அரசுக்கும் தொடர்பில்லை. ஆனால் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் அரசுக்கும் தொடர்பு உள்ளது. 

எனவே தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிவியில் இருந்து விஷால் விலக வேண்டும். தலைவர் பதவியில் இருந்து விலக பெரும்பாலான சங்க தயாரிப்பாளர்களின் ஆதரவு உள்ளது என்றும் சேரன் கூறினார்.

மேலும், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் குண்டாசை ஏவி கலாட்ட செய்வதற்கு விஷால் ஏற்பாடு செய்வதாகவும், காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் செய்தியாளர் சந்திப்பின்போது கோரப்பட்டது.

நடிகர் சங்க தலைவராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் விஷால், தற்போது ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட மனு செய்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பூதகாரமாகி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

அன்புமணியின் ஆட்டம் ஆரம்பம்..! ஜிகே மணி அதிரடி நீக்கம்..!
இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!