ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி  உங்களால் பண்ணமுடிகிறது? எச்.ராஜாவை கிழிக்கும் விஷால்...

 
Published : Oct 22, 2017, 10:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி  உங்களால் பண்ணமுடிகிறது? எச்.ராஜாவை கிழிக்கும் விஷால்...

சுருக்கம்

vishal condemns against H raja seen mersal in online

தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தை இணையதளத்தில் பார்த்தாக பா.ஜ., தேசிய தலைவர் எச்.ராஜா கூறி இருப்பதற்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி வரி, திட்டங்களை விமர்சித்த தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிவி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த பாஜக தேசிய செயலாளர் H. ராஜா, இணையதளத்தில் மெர்சல் படத்தைப் பார்த்ததாக கூறியிருந்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ஒரு தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் நான் திருட்டுத்தனமாக இணையதளத்தில் சட்டவிரோதமாக புதிய படத்தை பார்த்தேன் என்று பேட்டிகொடுப்பது மிகவும் வேதனையளிக்கிறது. 

ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா மத்திய மாநில அரசுகள்? அதனால் தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.எச். ராஜா அவர்களுக்கு... மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? உங்களை போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதை செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணம்.

இது எங்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விஷால் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு