மத்திய அரசு எங்களை கட்டுப்படுத்தவில்லை - முதல்வர் எடப்பாடி திட்டவட்டம்...!

 
Published : Oct 21, 2017, 09:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
மத்திய அரசு எங்களை கட்டுப்படுத்தவில்லை - முதல்வர் எடப்பாடி திட்டவட்டம்...!

சுருக்கம்

edappaadi palanisamy said The central government did not control the state government in any way

மாநில அரசை எந்த விதத்திலும் மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை எனவும் தமிழக திட்டங்களுக்கு தேவையான நிதிகளை பெறவே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை தாம்பரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

அதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மாநில அரசை எந்த விதத்திலும் மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை எனவும் அதிமுகவை யாராலும் அழிக்கவோ உடைக்கவோ முடியாது எனவும் தெரிவித்தார். 

தமிழக திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறவே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம் எனவும் ஒருசொட்டு தண்ணீர் கூட வீணாக கூடாது என்பதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். 

மேலும் தடுப்பணைகள் கட்டுவதற்காக ரூ. 1000 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது எனவும் மற்ற துறைகளை விட பள்ளிக்கல்வி துறைக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு