இனிமேல், பாதுகாப்பாக இருக்குமாம்….விரைவில், ‘முக அங்கீகாரம்’ மூலம் ஆதார் கார்டு...

First Published Jan 16, 2018, 4:05 PM IST
Highlights
Virtual Aadar card... cnetral govt plan


முக அங்கீகாரம்(facial authentication) மூலம் ஆதார் கார்டு பெறும் முறையை வரும் ஜூலை மாதம் முதல் செயல்படுத்த ஆதார் வழங்கும் உதய் அமைப்பு முடிவு செய்துள்ளது.

ஆதாரில் தற்போது, கைரேகை மற்றும் கண் கருவிழி மட்டுமே பதிவு செய்யப்பட்டு தனிநபர் அடையாளங்களாக சேர்க்கப்பட்டு வருகின்றன. இனி, முகத்தையும் ஸ்கேன் செய்து, அதையும் ஒரு அடையாளமாக வைக்கப்படும்.

தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல கடின பணிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், முதியோர்கள் தங்களின் கைவிரல் ரேகை சில நேரங்களில் பொருந்துவதில்லை என ஆதார் அமைப்புக்கு தொடர்ந்து புகார்கள் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், போதுமான பாதுகாப்பு வழிமுறைகள் இல்லாததாலும் ஆதார் தகவல்கள் திருபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால், பாதுகாப்பு அம்சங்களை வலிமைப்படுத்தும் நோக்கில் ‘முக அங்கீகார’ முறையை செயல்படுத்த ஆதார் அமைப்பு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இருக்கும் கைரேகை, கண் கருவிழி, ஆகியவற்றோடு முக அங்கீகாரமும் அடையாளங்களாகச் சேர்க்கப்படும்.

இது குறித்து ஆதார் வழங்கும் ‘உதய்’ அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

ஆதார் கார்டு வைத்து இருக்கும் மக்களில் சிலர் தங்களின் சொந்த கைவிரல்ரேகை சரியாக பொருந்துவதில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக முதியோர்கள், கடினமான பணியில் ஈடுபட்டு இருக்கும் மக்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

அவர்களின் உதவும் வகையில் ஜூலை 1ந்தேதி முதல், ‘முக அங்கீகார’ முறையை செயல்படுத்த உதய் அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த முறை ஏற்கனவே பாதுகாப்பு அம்சங்களாகக் கருதப்படும் கருவிழி, கைவிரல்ரேகை ஆகியவற்றோடு சேர்த்து பின்பற்றப்படும். ஒரு தனது ஆதார் விவரங்களை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கவும், எளிதாக அடையாளம் காணும் வகையிலும், இந்த முக அங்கீகார முறை செயல்படுத்தப்படுகிறது.

இப்போது கருவிழி, கைவிரல்ரேகை மூலம் மட்டுமே ஒருவரின் ஆதார் விவரங்கள் பதியப்படுகிறது, இனி, முக அங்கீகாரம் மூலமும் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக வரும் மார்ச் 1ந் தேதி முதல் 16 இலக்கம் கொண்ட ‘இணைய ஆதார்’( விர்ச்சுவல் ஆதார்) முறையை உதய் அமைப்பு அறிமுகம் செய்கிறது குறிப்பிடத்தக்கது.

click me!