எல்.முருகனை தலைவராக்கி தாழ்த்தப்பட்டவர்களால் முஸ்லீம்கள் மீது வன்முறை... பாஜக மீது அதிரடி குற்றச்சாட்டு..!

By Thiraviaraj RMFirst Published Mar 16, 2020, 1:29 PM IST
Highlights

 வீடுகளை எரித்து விட்டு பள்ளிவாசலுக்கு முன் வந்து சாராயம் குடித்து, உணவு உண்டு அங்கேயே மலம் கழித்து வைத்திருந்தார்கள். இது உயர் ஜாதியினர் செய்யக் கூடிய வேலையில்லை. அங்கு யாரும் பிராமணர்கள் வரவில்லை. 


தமிழிசை சவுந்தரராஜனை தலைவராக்கி ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களாக மாற்றியதை போல தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை தலைவராக்கி முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுத்துவதாக பாஜக மீது முஸ்லீம் மத தலைவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ’’சென்ற தலைவராக நாடார் சமூகத்தவரை தலைவராக கொண்டுவந்து பெரும்பாலான நாடார்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இழுத்து விட்டார்கள். இப்போது தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை பாஜக தலைவராகக் கொண்டு வந்து இருக்கிறார்கள். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்களை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்புவதற்காக இந்த செயலை செய்து இருக்கிறார்கள். இப்போது வேலை அதிகமாகி விட்டது. உங்களது அழைப்பு பணியை நீங்கள் தீவிரப்படுத்த வேண்டும்.

உங்களது காசு பணங்களை அந்த முஸ்லிம்களுக்கு அப்படியானவர்களுக்கு கொண்டு செலுத்தி உங்களுக்கு ஆதரவாளர்களுக்கு உங்களுடைய நண்பர்களாக சகோதரர்களாக மாற்றுவதற்கு நீங்கள் முன்வர வேண்டும். ஏனென்றால், வன்முறைகள் அத்தனையிலும் ஈடுபடுகிறார்கள். அவர்களை யாரென்று நீங்கள் பார்த்தால் அவர்கள் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான்.

pic.twitter.com/kupWoUCPzx

— தணிகைவேல் சாந்தமூர்த்தி. (@SThanigaivel5)

 

கடைசி நேரத்தில் கொடுக்கக்கூடிய ஒரு மதுவுக்காகவும், உணவிற்காகவும் சில காசுகளுக்கும் அவர்கள் விலை போய் வருகிறார்கள். முஸ்லிம்கள் உயிருக்கு அவர்கள் குறி வைக்கிறார்கள். நான் பார்த்த இடங்களில் வீடுகளை எரித்து விட்டு பள்ளிவாசலுக்கு முன் வந்து சாராயம் குடித்து, உணவு உண்டு அங்கேயே மலம் கழித்து வைத்திருந்தார்கள். இது உயர் ஜாதியினர் செய்யக் கூடிய வேலையில்லை. அங்கு யாரும் பிராமணர்கள் வரவில்லை. புத்திஸ்டுகள் வரவில்லை. ராஜ்புத் வரவில்லை. அடித்தட்டு மக்களான தாழ்த்தப்பட்டவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் வந்து அத்தனை விதமான அரங்கேற்றங்கள் செய்திருக்கிறார்கள்’’என அவர் தெரிவித்துள்ளார். 

click me!