தன்னுடைய அழகின் ரகசியம் என்ன? என்று பலர் கேட்பதாக குறிப்பிட்ட குஷ்பு, தான் தினமும் காலையில் எழுந்தவுடன், ‘கண்ணாடியை பார்த்து, நீ அழகு டா செல்லம்' என தன்னை தானே வர்ணித்து கொள்வதாகவும் அதுவே தனது அழகின் ரகசியம் என்றார். மேலும் தன்னை போன்றே அனைத்து பெண்களும் தங்களை ரசிக்க வேண்டும் என்றும் குஷ்பு பேசியிருக்கிறார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய சோனியா காந்தி நற்பணி மன்றம் சார்பாக பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுவை அமைச்சர் கந்தசாமி, காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய குஷ்பு பிரதமர் மோடி தனது சுயவிளம்பரத்துக்காக ரூ.4,800 கோடி செலவு செய்திருப்பதாக விமர்சித்தார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஒரு இடத்தில் வெற்றி பெற்றாலும் அது காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி தான் என்றார். தன்னுடைய அழகின் ரகசியம் என்ன? என்று பலர் கேட்பதாக குறிப்பிட்ட குஷ்பு, தான் தினமும் காலையில் எழுந்தவுடன், ‘கண்ணாடியை பார்த்து, நீ அழகு டா செல்லம்' என தன்னை தானே வர்ணித்து கொள்வதாகவும் அதுவே தனது அழகின் ரகசியம் என்றார். மேலும் தன்னை போன்றே அனைத்து பெண்களும் தங்களை ரசிக்க வேண்டும் என்றும் குஷ்பு பேசியிருக்கிறார்.
திமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்..? விரைவில் அறிவிப்பு..!
கே.எஸ்.அழகிரி பேசும் போது, மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றார். அதன்காரணமாக பஸ், ரெயில் கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
போதையில் வாகனம் ஓட்டியவர் கைது..! முதன்முறையாக காவல்துறை அதிரடி..!