காலியானது திமுக வெற்றி பெற்ற தொகுதி... அதிரடி வெற்றிக்கு தயாராகும் அதிமுக..!

Published : Jun 17, 2019, 02:38 PM ISTUpdated : Jun 17, 2019, 02:41 PM IST
காலியானது திமுக வெற்றி பெற்ற  தொகுதி...  அதிரடி வெற்றிக்கு தயாராகும் அதிமுக..!

சுருக்கம்

திமுக எம்.எல்.ஏ ராதாமணி மறைவை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.   

திமுக எம்.எல்.ஏ ராதாமணி மறைவை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். 

முன்னதாக நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த எச்.வசந்தகுமார் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நாங்குநேரி தொகுதியை தேர்தல் ஆணையம் காலியான தொகுதியாக அறிவித்தது. 

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ ராதாமணி கடந்த சில தினங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதியும் தற்போது காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். ஒரு தொகுதி காலியானால் அதில் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். எனவே காலியாக உள்ள இந்த இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதியையும் சேர்த்து வரும் செப்டம்பரில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதற்கிடையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளிலும் தோல்வியடைந்து விட்டதால் அதிமுக தலைமை எப்படியாவது வர உள்ள இடைத்தேர்தலிலும், வேலூர் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்று வேட்பாளர்களை தயார் செய்து வருகிறது. மறுபுறம் ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக செயல்பட்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

நீதிபதி சாமிநாதனுக்கு எதிராக கையெழுத்து போட்ட எம்.பி.க்களை உடனே தூக்க வேண்டும்..! அண்ணாமலை ஆவேச பேச்சு
அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி! ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்! பொங்கியெழுந்த இபிஎஸ்!