விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்... இறுதிப் பட்டியலில் இருவர்..!

By Thiraviaraj RMFirst Published Sep 24, 2019, 12:38 PM IST
Highlights

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் இறுதிப்பட்டியலில் உள்ள இருவரில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.  

திமுகவில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக இருக்கிற நா.புகழேந்தி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். விக்கிரவாண்டி  தொகுதிக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. லட்சுமணன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேலு, காணை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர், வழக்கறிஞர் தம்பித்துரை ஆகியோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க.வின் வழக்கறிஞர் அணி செயலாளருமான மனோஜ் பாண்டியன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதுபோல் அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளரும், நடிகர் ஜஸ்டினின் மகளுமான பபிதா நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம் கைநீட்டும் நபருக்கே வாய்ப்புகள் அதிகம். சி.வி.சண்முகம் தனது சகோதரர் ராதாகிருஷ்ணனை போட்டியிட வைக்க முயன்றார். ஆனால் ராதாகிருஷ்ணனுக்கு விருப்பம் இல்லை. ஆகையால் அவர் தனக்கு வேண்டியவர்களுக்கு சீட் கொடுத்தால் போதும் என தெரிவித்து விட்டார். இந்நிலையில் தனது ஆதரவாளரான காணை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்தமிழ்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர் ஆகிய இருவரில் ஒருவருக்கு சீட் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. 

click me!