அதிமுக ஆட்சிக்காலத்தில் நெல்லை மாநகராட்சியின் மேயராகவும், பிறகு மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்து வந்த விஜிலா சத்தியானந்த் கடந்த 2021ம் ஆண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர் நல வாரிய தலைவராக விஜிலா சத்யானந்தை தமிழக அரசு நியமித்துள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் நெல்லை மாநகராட்சியின் மேயராகவும், பிறகு மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்து வந்த விஜிலா சத்தியானந்த் கடந்த 2021ம் ஆண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
undefined
இதையும் படிங்க: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கடி... பெங்களூருவில் இருந்து வந்த அதிர்ச்சி தகவல்..!
திமுகவில் இணைந்த இவர் அன்று முதலே திருநெல்வேலி எம்.பி. சீட்டுகாக காய் நகர்த்தல்களை தொடங்கினார். ஆவுடையப்பன், சபாநாயகர் அப்பாவு ஆகியோரின் ஆசி இருப்பதால் வரும் விஜிலா சத்யானந்த் நெல்லை மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவருக்கு தமிழக அரசு புதிய பொறுப்பை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: ஜாபர் சாதிக்கிற்கு சாதிக் பாஷா நிலைமை வந்துவிடக் கூடாது.! உயிருக்கு ஆபத்து! சி.வி.சண்முகம் பகீர்.!
இந்நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர் நல வாரிய தலைவராக விஜிலா சத்தியானந்த் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லையில் கிறிஸ்தவ மக்களின் வாக்குகளை பெற திமுக எடுத்துள்ள அரசியல் யுத்தி என கூறப்படுகிறது.