’இன்றுவரை எங்கள் தயவில்தான் அதிமுக ஆட்சி நடக்கிறது’...பிரேமலதா தெனாவட்டுப் பேட்டி...

Published : Mar 08, 2019, 01:43 PM IST
’இன்றுவரை எங்கள் தயவில்தான் அதிமுக ஆட்சி நடக்கிறது’...பிரேமலதா தெனாவட்டுப் பேட்டி...

சுருக்கம்

‘கூட்டணி என்று வருகிறபோது அடிதடி, சண்டை சச்சரவுகள் வருவது அரசியலில் சகஜமானது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது தாமதாவதற்கு மீடியாக்கள் ஏன் இவ்வளவு அவசரப்படுகின்றன என்பதுதான் புரியவில்லை. ஆக்கப் பொறுத்தவங்க. ஆறப்பொறுத்துதான் ஆகவேண்டும்’ என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

கூட்டணி குழப்பங்கள் குறித்து தற்சமயம் பத்திரிகையாளர்களைச் சந்தித்துவரும் பிரேமலதா, திமுகவை தரக்குறைவாக விமர்சித்ததோடுநில்லாமல், அதிமுக குறித்தும் மிக காட்டமாகவே பேசினார். ‘கேப்டனுடன் கூட்டணி வைத்துதான் அன்று ஜெயலலிதாவே ஆட்சியை பிடித்தார். எங்கள் தயவில் அன்று ஆட்சியைப் பிடித்த அதிமுக இன்றளவும் ஆட்சியில் இருப்பது எங்கள் தயவில்தான். அது ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்குமே தெரியும்.

‘பா.ம.கவுடன் கூட்டணி அமைக்கும் அதே நேரத்தில் தேமுதிகவுடனும் கூட்டணி குறித்து பேசியிருந்தால் இவ்வளவு குழப்பங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை. இதனால்தான் எங்களுக்கும் அதிமுகவுக்கும் இடையே கம்யூனிகேஷன் கேப் ஆகிவிட்டது. இது இன்னும் இரு நாளில் சரி செய்யப்பட்டு முறையாக அறிவிக்கப்படும்’என்றார் பிரேமலதா.

PREV
click me!

Recommended Stories

ரூ.200 கோடியை விட்டு; ரூ.2 லட்சம் கோடியை அள்ள வந்துருக்காரு.. விஜய் மீது கருணாஸ் அட்டாக்!
தேவாலயத்திற்குச் சென்று கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி..!