வாழ்த்து மழையில் விஜயகாந்த்.. ஆசை ஆசையா வீடுவரை வந்து கேப்டனை சந்திக்க முடியாமல் திரும்பிய பிரபலம்.

Published : Aug 25, 2021, 01:45 PM IST
வாழ்த்து மழையில் விஜயகாந்த்.. ஆசை ஆசையா வீடுவரை வந்து கேப்டனை சந்திக்க முடியாமல் திரும்பிய பிரபலம்.

சுருக்கம்

கமல்ஹாசன் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தி:  எளியோருக்குப் பாதிப்பு என்றால் தன் வரம்பில் இயன்றதை அதிரடியாகவும் உடனடியாகவும் செய்து துயர்துடைக்கும் மனம் வாய்ந்த நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் , சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் டிவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் காணொளி  பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தொலைபேசி மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். நடிகர்கள் மன்சூர் அலிகான் , ரோபோ சங்கர் , தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன்  உள்ளிட்டோர் விஜயகாந்தின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர். விஜயகாந்த் இல்லத்திற்கு வருகை தந்த நடிகர் ரோபோ சங்கர் பிரேமலதாவை சந்தித்து , விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறுமாறு தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரோபோ சங்கர்சங்கர்: " விஜயகாந்தை இன்று நேரில் பார்த்து வாழ்த்து தெரிவிக்க அசைப்பட்டேன். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் விஜயகாந்தை நேரில் சந்திக்க முடியவில்லை. எனவே பிரேமலதாவை நேரில்  பார்த்து எனது வாழ்த்தை விஜயகாந்திடம்  தெரிவிக்குமாறு கூறினேன்.விஜயகாந்த் போல பேசிதான் என் திரை வாழ்வை தொடங்கினேன். அவர் குரல் போலவே பேசுவதாக என்னிடம் விஜயகாந்த் பலமுறை கூறியுள்ளார். திரையரங்குகள் திறக்கப்பட்டது மகிழ்ச்சியான செய்தி. Ott யில் பார்ப்பதை விட திரையரங்கில் படங்களை பார்க்கும்போது கூடுதல் சந்தோசம் கிடைக்கும் என்றார். 

சரத்குமார் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தி: நட்பின் இலக்கணத்திற்கும், மனிதநேயத்திற்கும், கடின உழைப்பிற்கும் உதாரணமாக திகழும் அருமை நண்பர் கேப்டன் அவர்களின் பிறந்தநாளில், அவர் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், மகிழ்வுடனும் வாழ  வாழ்த்துகிறேன். திரைப்பட படப்பிடிப்பு நாட்கள், இசை,படம் வெளியீட்டு விழாக்கள், வெற்றி விழாக்கள், நடிகர் சங்க நிகழ்ச்சிகள், அரசியல் பயணங்கள் என பல பரிமாண வாழ்க்கை பாதை மாற்றத்தில் எங்களது சிநேகிதம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தன்மை மாறாமல் தொடர்வதை அவரின் பிறந்தநாளில் நினைத்து பூரிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

கமல்ஹாசன் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தி:  எளியோருக்குப் பாதிப்பு என்றால் தன் வரம்பில் இயன்றதை அதிரடியாகவும் உடனடியாகவும் செய்து துயர்துடைக்கும் மனம் வாய்ந்த நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..