தமிழகம் முழுவதும் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய 3நாட்களுக்கு.. இந்த தடை தொடரும்.. சுகாதாரத்துறை அதிரடி.

Published : Aug 25, 2021, 01:16 PM IST
தமிழகம் முழுவதும் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய 3நாட்களுக்கு.. இந்த தடை தொடரும்.. சுகாதாரத்துறை அதிரடி.

சுருக்கம்

இதன் மூலம், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் அச்சம் காரணமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய 3நாட்களுக்கு பக்தர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல தடை தொடரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இருப்பினும், கடந்த சனிக்கிழமையன்று தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிவிந்தது. 

அதில், பள்ளி, கல்லூரிகளுக்கு அனுமதியும், கடற்கரை, பூங்காக்கள், கேலிக்கை விடுதிகள், நீச்சல் குளங்களுக்கு அனுமதியளித்தது. ஆனால், தமிழகத்தில் பண்டிகை காலமாக இருப்பதால் பொதுமக்கள் வழிபாட்டு தளங்களில் அதிக அளவில் கூடுவதை தவிர்ப்பதற்காக வழிபாட்டு தளங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த தடையானது கடந்த இரண்டு வாரங்களாக இருந்த நிலையில் மேலும் மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்களுக்கு தடை தொடரும் எனவும், இந்த விதிகளை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக சசுகாதாரத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!
களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி